கொலையில் முடிந்த டி.வி நிகழ்ச்சி விவகாரம்.. சொத்து தகராறில் தந்தையை தீர்த்து கட்டிய அம்மா, மகன்!

 
கருப்பண்ணன்

சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே தாண்டவராயபுரம் மாதா கோவில் தெருவைச் சேர்ந்த லட்சுமணன் மகன் கருப்பண்ணன் (வயது 67). கட்டிட வேலை செய்து வருகிறார். இவருக்கு மனைவி மாரியம்மாள் (65), மகன் ராஜா (40), மகள் சந்திரா (35). மகன் ராஜாவுக்கு இரண்டு மனைவிகள் உள்ள நிலையில், முதல் மனைவியை பிரிந்து இரண்டாவது மனைவியுடன் வசித்து வருகிறார். மகள் சந்திராவுக்கு திருமணமாகி கணவர் வீட்டில் வசித்து வருகிறார். மேலும் ராஜா கட்டிட தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார்.

இந்நிலையில் தாண்டவராயபுரம், வெண்ணந்தூர் பகுதியில் உள்ள சொத்தை மகன் ராஜாவின் முதல் மனைவி மகன் சங்கர் பெயரில் பதிவு செய்ய ராஜாவின் தந்தை கருப்பண்ணன் முடிவு செய்துள்ளார். இதனால் தந்தை கருப்பணனுக்கும், மகன் ராஜாவுக்கும் கடந்த சில ஆண்டுகளாக தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. மேலும் கருப்பண்ணன் தனது மனைவி மாரியம்மாளுடன் கருத்து வேறுபாடு காரணமாக தாய் வீட்டில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில், சொத்தை என் பெயரில் பதிவு செய்யுமாறு கருப்பண்ணனிடம் மகன்  ராஜாவும், அவரது தாய் மாரியம்மாளும் தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

கடந்த இரு வாரங்களுக்கு முன்பு தனியார் தொலைக்காட்சியில் நடந்த விவாத நிகழ்ச்சியில் கருப்பண்ணன், அவரது மனைவி மாரியம்மாள், மகன் ராஜா ஆகியோர் கலந்து கொண்டனர். அப்போது அந்த நிகழ்ச்சியில் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். இந்த வீடியோவும் சமூக வலைதளங்களில் வைரலானது. இந்நிலையில், இன்று வீட்டில் தனியாக இருந்த கருப்பண்ணன், அவரது மனைவி மாரியம்மாள், மகன் ராஜா ஆகிய இருவரும் அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பி ஓடிவிட்டனர்.

இதில் ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்த கருப்பண்ணன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து தகவலறிந்த ஆத்தூர் நகர போலீஸார் சடலத்தைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய அவரது மனைவி மாரியம்மாள், மகன் ராஜா ஆகியோரை காவல் துறையினர் தேடி வருகின்றனர். சொத்து தகராறில் தந்தையை மகன் கொன்ற சம்பவம் ஆத்தூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பங்குனி உத்திரத்தின் மகத்துவம் தெரிஞ்சுக்கோங்க..!

பங்குனி மாத பண்டிகைகள், விசேஷ நாட்கள்.... முழு பட்டியல்!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள் 

From around the web