வானை முட்டிய கரும்புகை... டிவி உதிரிபாகங்கள் தயாரிப்பு தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து!

 
ஹுண்டாய் ஹுண்டாய்

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த வல்லம் சிப்காட் பகுதியில் டிவி உதிரிபாகங்கள் தயாரிக்கும் ஒரு தனியார் எலக்ட்ரானிக் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்தத் தொழிற்சாலையில் இன்று காலை வழக்கம் போல ஊழியர்கள் தங்களின் பணிகளில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். அப்போது அங்குள்ள ஒரு பிரிவில் எதிர்பாராத விதமாகப் புகை மூட்டத்துடன் கூடிய பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.

சுமார் 600 ஊழியர்கள் வேலை செய்யும் அந்த நிறுவனத்தில் விபத்து நேர்ந்த உடன் அபாய எச்சரிக்கை மணி ஒலிக்கப்பட்டது. இதனால் சுதாரித்துக் கொண்ட அதிகாரிகள் மற்றும் தொழிலாளர்கள் அனைவரும் உடனடியாகப் பத்திரமாக வெளியில் தப்பி ஓடினர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் நீண்ட போராட்டத்திற்குப் பிறகு தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

தீ தீயணைப்பு வெடிவிபத்து பட்டாசு

இந்த விபத்தினால் தொழிற்சாலையில் இருந்த பல லட்ச ரூபாய் மதிப்பிலான பொருட்கள் மற்றும் உதிரிபாகங்கள் எரிந்து சேதமடைந்ததாகக் கூறப்படுகிறது. அதிர்ஷ்டவசமாக ஊழியர்கள் அனைவரும் முன்கூட்டியே வெளியேற்றப்பட்டதால் பெரிய அளவிலான உயிர்ச் சேதம் எதுவும் தவிர்க்கப்பட்டது. இந்தத் தீ விபத்துக்கான காரணம் குறித்து ஸ்ரீபெரும்புதூர் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.