வேளாங்கண்ணியில் "TVK" முழக்கத்தால் பரபரப்பு.. விஜய் ரசிகர்களால் தாமதமாகத் தொடங்கிய திருப்பலி பூஜை!

 
வேளாங்கண்ணி வேளாங்கண்ணி

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் இன்று வேளாங்கண்ணி பேராலயத்திற்கு வருகை தரப்போவதாகப் பரவிய தகவலால் ஏற்பட்ட கூட்ட நெரிசல் மற்றும் முழக்கங்களால், அங்கு நடைபெறவிருந்த புனித திருப்பலி பூஜை சுமார் 30 நிமிடங்கள் தாமதமாகத் தொடங்கியது.

விஜய் அதிகாலை 5 மணி அளவில் பேராலயத்திற்கு வந்து பிரார்த்தனை செய்வார் என எதிர்பார்க்கப்பட்டது. இதற்காக நள்ளிரவு முதலே ஆயிரக்கணக்கான ரசிகர்கள் அங்கு திரண்டனர். ஆனால், அவர் வராததால் ஏமாற்றமடைந்த ரசிகர்கள் மற்றும் தொண்டர்கள், பேராலய வளாகத்திற்குள்ளேயே "TVK TVK" என உரத்த குரலில் முழக்கமிட்டனர்.

வே

அமைதியாக நடைபெற வேண்டிய அதிகாலை திருப்பலி பூஜை, ரசிகர்களின் கூச்சல் மற்றும் முழக்கங்களால் ஏற்பட்ட இடையூறு காரணமாகத் திட்டமிட்ட நேரத்திற்குத் தொடங்க முடியாமல் போனது. சுமார் 30 நிமிடங்கள் தாமதமாகவே பூசைகள் தொடங்கப்பட்டன.

புனிதத் தலத்தின் அமைதியைக் குலைக்கும் வகையில் ரசிகர்கள் அரசியல் முழக்கங்களை எழுப்பியதால், நீண்ட தூரத்தில் இருந்து பிரார்த்தனைக்காக வந்திருந்த பொதுமக்களும் பக்தர்களும் கடும் அவதிக்குள்ளாகினர். ரசிகர்களின் இந்தச் செயலால் அங்கு சிறிது நேரம் பதற்றமான சூழல் நிலவியது.

வே

இறுதியில், விஜய் இன்று வரவில்லை என்ற தகவலை பேராலய நிர்வாகம் திட்டவட்டமாகத் தெரிவித்ததையடுத்து, அங்கிருந்த ரசிகர்கள் ஏமாற்றத்துடன் கலைந்து சென்றனர்.

பாதுகாப்பு மற்றும் கூட்ட நெரிசலைக் கருத்தில் கொண்டு விஜய் தனது பயணத்தை ரத்து செய்திருந்தாலும், தகவல் தொடர்பு இடைவெளியால் வேளாங்கண்ணியில் ஏற்பட்ட இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. தற்போது அங்கு நிலைமை சீராகியுள்ள போதிலும், கூடுதல் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.