மாஸ் வீடியோ... பரந்தூரில் ’கத்தி’ பட வசனத்தை பேசிய தவெக தலைவர் விஜய்!

 
கத்தி விஜய்

 தமிழகத்தில் காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைக்க 5000 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டு வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து 900 நாட்களுக்கு மேலாக அப்பகுதி மக்கள் போராடி வருகின்றனர். இவர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் தவெக தலைவர் விஜய்  பரந்தூர் சென்றார். அப்போது விமான நிலையத்தை இந்த இடத்தில் அமைக்க வேண்டாம் எனவும் விவசாய நிலங்கள் அழியாத விவசாய நிலங்கள் இல்லாத வேறு இடத்தில் அமைக்க வேண்டும் எனவும் மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு கோரிக்கை விடுத்தார். அதன் பிறகு பரந்தூரில் விமான நிலையம் வராது எனவும் அதற்காக சட்டப் போராட்டங்கள் அனைத்தையும் மேற்கொள்ள மக்களுக்கு உறுதுணையாக இருப்பேன் எனவும் உறுதி அளித்தார். மேலும் என்னுடைய முதல் அரசியல் களப்பயணத்தை உங்கள் வீட்டுப் பிள்ளையாக பரந்தூரிலிருந்து உங்கள் ஆசீர்வாதத்துடன் தொடங்கியுள்ளேன் எனவும் கூறினார்.


இந்நிலையில் சினிமா வசனம் போல் தொடர்ந்து பேசி வருவதாக அவர் மீது அரசியல் கட்சி தலைவர்கள் விமர்சனங்களை முன் வைத்து வருகின்றனர்.இது குறித்து  நடிகர் எஸ்வி சேகர் சினிமா சூட்டிங் போல நடிகர் விஜய் பேசிக் கொண்டிருக்கிறார் எனவும் அவர் என்னும் முழுமையாக அரசியல் களத்திற்குள் வரவில்லை எனவும் 2026 ம் ஆண்டு தேர்தலில் ஜெயிக்க கண்டிப்பாக கூட்டணிதான் முக்கியம் எனவும் இதனை விஜய் புரிந்து கொள்ள வேண்டும் எனவும் கூறியுள்ளார்.  

விஜய் மக்கள் இயக்கம்
  நான் வளர்ச்சிக்கு எதிரானவன் கிடையாது. திட்டங்கள் வரக்கூடாது என சொல்லவில்லை. ஆனால் இந்த இடத்தில் வர வேண்டாம் என்றுதான் சொல்கிறேன் என்று விஜய் கூறியது கத்தி படத்தில் வரும் வசனம் என்று கூறி தற்போது அந்த வீடியோவை சமூக வலைதளங்களில்  வைரலாக்கி வருகின்றனர்.  அதாவது கத்தி படத்தில் ஃபேக்டரியே வர வேண்டாம் என்று நாங்கள் சொல்லவில்லை. ஆனால் குடிக்கிற தண்ணீரில் இருந்து சோப்பு வேண்டாம் என்று தான் சொல்கிறோம் என்று கூறியிருப்பார். அதேபோன்று நேற்று பரந்தூரில் ஏர்போர்ட்டே வரவேண்டாம் என்று நான் சொல்லவில்லை. இந்த இடத்தில் வேண்டாம் என்று தான் சொல்கிறேன் எனக் கூறியிருந்தார். இரு  வசனங்களையும் ஒன்று சேர்த்து ரசிகர்கள் ட்ரோல் செய்து வருகின்றனர்.  

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!

மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!

தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?

செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!

தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க! 

From around the web