ட்ரோல் ஆகும் வீடியோ... தமிழகத்தில் மீண்டும் எம்ஜிஆர் ஆட்சி ?.. புதிய வரலாறு படைப்பாரா விஜய்…?

திமுகவுக்காக எம்ஜிஆர் செய்த பணிகள் அளப்பரியது. ஆனால் பிற்காலத்தில் கலைஞர் மற்றும் எம்ஜிஆர் இடையே கருத்து வேறுபாடுகள் என்பது ஏற்பட்டதால் பின்னர் அதிமுக என்ற தனி கட்சியை தொடங்கினார். அப்போது கூட கூத்தாடி என்று எம்ஜிஆரை விமர்சித்தார்கள். ஆனால் அவர் கட்சி தொடங்கிய முதல் ஆண்டில் முதல்வராக பொறுப்பேற்ற நிலையில் இறக்கும் வரை அவர் தான் தமிழ்நாட்டின் முதல்வராக இருந்தார். அந்த சமயத்தில் கம்யூனிச கட்சிகள் என்பது அதிமுக மற்றும் திமுகவுக்கு இணையாக இருந்தது என்று சொன்னால் மிகை ஆகாது.
இதன் காரணமாக திராவிட அரசியலையும் கம்யூனிச அரசியலையும் எம்ஜிஆர் கையாண்டார். இதேபோன்று விஜய் இளைஞர்களை கவர்வதற்காக திராவிடத்தையும் தமிழ் தேசியத்தையும் தன்னுடைய கொள்கைகளாக அறிவித்துள்ளார். தன்னுடைய திரைப்படங்கள் மூலமாக மக்களை கவர்ந்தார். ஆனால் இப்போது திரைப்படங்கள் மூலமாக அரசியலை மக்களிடம் கொண்டு சென்றால் அது எடுபடாது. தேர்தல் மூலமாக தான் மக்களிடம் அரசியலைக் கொண்டு சேர்க்க முடியும். நடிகர் விஜய் கட்சி தொடங்கிய நிலையில் அவரையும் கூத்தாடி என விமர்சிக்க தொடங்கியுள்ளனர்.
ஆனால் எம்ஜிஆர் போன்று கூத்தாடி என்ற சொல்லை கண்டிப்பாக விஜய் சுக்கு நூறாக உடைப்பேன் எனக் கூறுகிறார். 2026 ம் ஆண்டு தேர்தலில் கண்டிப்பாக விஜய் திராவிட கட்சிகளுக்கு மிகப்பெரிய சவாலாக அமைவார் எனக் கூறப்படும் நிலையில் எம்ஜிஆர் அரசியலை விஜய் கையில் எடுத்துள்ளார். மேலும் எம்ஜிஆர் கட்சி தொடங்கிய முதல் ஆண்டில் முதல்வராக மாறிய நிலையில் விஜய்யும் அதே நம்பிக்கையில் இருக்கிறார். இதன் காரணமாக அடுத்து வரும் 2026 ம் ஆண்டு தேர்தலில் விஜய்யின் வருகை எப்படிப்பட்ட தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!
தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?
செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!
தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க!