சபாநாயகர் அப்பாவு பின்னடைவு: தமிழக வெற்றிக் கழகம் முன்னிலை!

 
தமிழக சட்டசபையின் முதல் கூட்டத்தொடர்! சபாநாயகர் அப்பாவு விளக்கம்! தமிழக சட்டசபையின் முதல் கூட்டத்தொடர்! சபாநாயகர் அப்பாவு விளக்கம்!

தமிழக சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணி முதல் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. முதலில் தபால் வாக்குகளும் அதனைத் தொடர்ந்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகளும் எண்ணப்பட்டு வருகின்றன. இதில் நெல்லை மாவட்டத்தில் உள்ள ராதாபுரம் தொகுதியில் ஆளுங்கட்சி வேட்பாளரும் தற்போதைய சபாநாயகருமான அப்பாவு தொடர்ந்து பின்னடைவைச் சந்தித்து வருகிறார்.

நெல்லை மாவட்டத்தில் உள்ள 5 தொகுதிகளில் அம்பாசமுத்திரம் தவிர மற்ற 4 தொகுதிகளிலும் தமிழக வெற்றிக் கழகமே முன்னிலை வகித்து வருகிறது. குறிப்பாக ராதாபுரம் தொகுதியின் 4 வது சுற்று முடிவில் சபாநாயகர் அப்பாவு 13,224 வாக்குகள் பெற்றுள்ளார். ஆனால் அவரை எதிர்த்துப் போட்டியிட்ட தமிழக வெற்றிக் கழக வேட்பாளர் கிறிஸ்டோபர் 14,950 வாக்குகள் பெற்று சுமார் 1,726 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.

இந்தத் தொகுதியில் பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர் 10,545 வாக்குகள் பெற்று மூன்றாவது இடத்தில் நீடிக்கிறார். அசைக்க முடியாத கோட்டையாகக் கருதப்பட்ட ராதாபுரம் தொகுதியில் சபாநாயகருக்கே ஏற்பட்டுள்ள இந்த ஆரம்பக்கட்ட சரிவு ஆளுங்கட்சித் தொண்டர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அடுத்தடுத்த சுற்று முடிவுகள் வெளியாகும்போது இந்த முன்னணி நிலவரத்தில் ஏதேனும் மாற்றங்கள் ஏற்படுமா என்பதை அறிய அரசியல் வட்டாரங்கள் மிகுந்த ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கின்றன.