ரயில் நிலையம் அருகே பயங்கரம்... தவெக நிர்வாகி பட்டாக்கத்தியால் வெட்டிக்கொலை!

 
tvk tvk

சிவகங்கை ரயில் நிலையம் அருகே உள்ள அரசு மதுபானக் கடைப் பகுதியில் நவீன் என்ற இளைஞர் மர்ம நபர்களால் மிகக் கொடூரமான முறையில் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார். இவர் தமிழக வெற்றிக் கழகத்தின் உள்ளூர் நிர்வாகியாகப் பொறுப்பில் இருந்து வந்தவர் எனக் கூறப்படுகிறது.  இந்த திடீர் கொலைச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் பயத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

போலீசார் காவல் ஜீப் விசாரணை கொலை கைது பாலியல் பலாத்காரம் நீட்டிப்பு தப்பியோட்டம் கைதி

மதுபானக் கடைக்கு வந்த நவீனுக்கும் அங்கிருந்த சிலருக்கும் இடையே திடீரென வாக்குவாதம் ஏற்பட்டுப் பெரிய தகராறாக மாறியுள்ளது. அப்போது போதை தலைக்கேறிய நிலையில் இருந்த ஒரு கும்பல், தங்களது இருசக்கர வாகனத்தில் மறைத்து வைத்திருந்த நீளமான பட்டாக்கத்தியை எடுத்து நவீனைச் சரமாரியாக வெட்டிச் சாய்த்துள்ளது. இதில் உடல் முழுவதும் பலத்த காயமடைந்த அவர் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிர் இழந்தார்.

இதுகுறித்துத் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சிவகங்கை நகர் போலீசார், கொலையுண்ட நவீனின் உடலைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொடூரக் கொலைக்கான உண்மையான பின்னணி என்ன, முன்விரோதம் காரணமா அல்லது போதை தகராறில் தற்செயலாக நடந்ததா என்பது குறித்துப் போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய மர்ம கும்பலைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.