பரபரப்பு...ஆன்லைன் லாட்டரி விற்ற தவெக நிர்வாகி ராம்குமார் !
தூத்துக்குடி பகுதியில் சட்டவிரோதமாக ஆன்லைன் லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்யப்படுவதாகக் காவல் துறையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்துள்ளது. இந்தத் தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தனிப்படை போலீசார் அங்கு தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அப்பகுதியில் ரகசியமாக லாட்டரி விற்பனையில் ஈடுபட்டிருந்த ஒரு நபரை போலீசார் கையும் களவுமாகப் பிடித்து விசாரணை நடத்தினர்.

போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் பிடிபட்ட நபர் தமிழக வெற்றிக் கழகத்தின் உள்ளூர் நிர்வாகியான ராம்குமார் என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை உடனடியாகக் கைது செய்த போலீசார் அவரிடமிருந்த தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளைப் பறிமுதல் செய்தனர். மேலும் இந்த ஆன்லைன் லாட்டரி விற்பனைக்காக அவர் பயன்படுத்தி வந்த கைபேசியையும் காவல் துறையினர் அவரிடமிருந்து கைப்பற்றினர்.
அரசியல் கட்சியில் பொறுப்பில் இருக்கும் ஒருவரே இது போன்ற சட்டவிரோத செயலில் ஈடுபட்டு கைதாகியுள்ள சம்பவம் தூத்துக்குடியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் அப்பகுதி தவெக தொண்டர்கள் மற்றும் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. கைதான ராம்குமார் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து இந்த தொழிலின் பின்னணியில் இருப்பவர்கள் குறித்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர்
