பேருந்து டிஜிட்டல் பலகையில் "தக்காளி வெற்றிக் கழகம்" ... தவெக தொண்டர்கள் ஆவேசம்!

 
government bus

சென்னை மாநகரப் பேருந்து ஒன்றின் டிஜிட்டல் பெயர் பலகையில் தக்காளி வெற்றி கழகம் என இடம்பெற்றிருந்த வாசகம் சமூக வலைதளங்களில் பரவி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த வினோதமான வாசகத்தைக் கண்ட பொதுமக்கள் மற்றும் தவெகவினர் அனைவரும் கடும் அதிர்ச்சியடைந்ததுடன் இது குறித்த புகைப்படங்களை இணையத்தில் அதிகம் பகிர்ந்து வருகின்றனர்.

தக்காளி வெற்றிக்கழகம்

அரசியல் கட்சியினரிடையே குழப்பத்தை ஏற்படுத்திய இந்தச் சம்பவம் தொடர்பாகத் துறை சார்ந்த அதிகாரிகள் உடனடியாக விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.கடந்த சில நாட்களுக்கு முன்பு மர்ம நபர்களின் கைவரிசையால் பேருந்தின் டிஜிட்டல் பெயர் பலகை மாற்றப்பட்டிருக்கலாம் என முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. இது குறித்துத் தகவல் அறிந்தவுடன் சம்மந்தப்பட்ட பணிமனை அதிகாரிகள் உஷார்படுத்தப்பட்டு உடனடியாக அந்தப் பெயர் பலகை சரிசெய்யப்பட்டதாக மாநகரப் போக்குவரத்துக் கழகம் விளக்கம் அளித்துள்ளது.

தவெக-வினர் ஷாக்..!! அரசு பேருந்தில் ஒளிபரப்பான 'தக்காளி வெற்றிக் கழகம்'..!!

பொதுமக்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்பட்ட இந்தச் சேட்டை பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.பொதுப் போக்குவரத்தில் உள்ள டிஜிட்டல் கருவிகளில் இதுபோன்று முறையற்ற வாசகங்கள் ஒளிபரப்பப்படுவது பாதுகாப்புக் குறித்த கேள்விகளை எழுப்பியுள்ளது. எதிர்காலத்தில் இதுபோன்ற தவறுகள் மீண்டும் நடைபெறாமல் இருக்கத் தகுந்த பாதுகாப்பு நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்த வேண்டும் எனப் பலரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். பே