தவெகவிற்கு வெளியில் இருந்து மட்டுமே ஆதரவு ... வீரபாண்டியன் பளிச்!

 
வீரபாண்டியன்

 

தமிழக வெற்றிக் கழகம் கூட்டணியில் தங்கள் கட்சி இடம்பெறவில்லை என்றும், வெளியில் இருந்து மட்டுமே ஆதரவு அளிக்கப்படும் என்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் வீரபாண்டியன் தெளிவுபடுத்தியுள்ளார். அரசு சுற்றறிக்கை விவகாரத்தில் அமைச்சர்கள் அளித்துள்ள விளக்கங்களை எங்களால் ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் அவர் திட்டவட்டமாக் குறிப்பிட்டுள்ளார்.

தவெக விஜய்

மக்களாட்சி தத்துவத்தின்படி முதல்வரும் அமைச்சர்களுமே அதிகாரிகளைச் சரியான முறையில் வழிநடத்த வேண்டும் என்று அவர் தனது கருத்தைத் தெரிவித்தார். ஆனால், தற்போதைய தமிழகச் சூழலில் இதற்கு முற்றிலும் மாறாக எல்லாமே தலைகீழாக நடந்து வருவதாகக் கூறி அவர் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.

அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இவரின் இந்தப் பேட்டி தற்போது சமூக வலைதளங்களிலும் விவாதிக்கப்பட்டு வருகிறது. வரவிருக்கும் தேர்தல்களை முன்னிட்டு கூட்டணி குறித்த இத்தகைய நிலைப்பாடுகள் அரசியல் வட்டாரத்தில் கூடுதல் கவனத்தைப் பெற்றுள்ளன.