தவெக அடுத்தடுத்த ஆட்டம் ஆரம்பம்... மாவட்ட செயலாளர்களை தொடர்ந்து நகரம், ஒன்றியம், வட்டம்!

 
விஜய்
 நடிகர் விஜய் அரசியலில் களமிறங்கி 2026 தேர்தலை இலக்காக கொண்டு தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகிகளை நியமித்து வருகிறார்.  விஜய், அரசியல் களத்தில் முதலாம் ஆண்டை நிறைவு செய்து 2 ம் ஆண்டில் அடியெடுத்து வைத்துவிட்டார். தற்போது தான் மாவட்ட செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.  

விஜய்

மொத்தம் 120 மாவட்ட செயலாளர்களில்   இன்னும் ஒரு சில மாவட்டங்களில் மட்டுமே பொறுப்புகள் நியமனம் செய்யப்படாமல் உள்ளது. அடுத்தகட்டமாக நகரம், ஒன்றியம், வட்டம் உள்ளிட்ட பகுதி கட்சி பொறுப்புகளுக்கு தகுதியான நபர்களை நியமனம் செய்ய தற்போது வரையில் நியமனம் செய்யப்பட்டுள்ள அந்தந்த மாவட்ட செயலாளர்களுக்கு கட்சித் தலைமை அறிவுறுத்தியுள்ளது.  இதற்கான உத்தேச பட்டியலை ஒரு வாரத்திற்குள் தயார் செய்து அனுப்ப வேண்டும் என உத்தரவிட்ட நிலையில்   நியமனம் செய்யப்பட்டுள்ள மாவட்ட செயலாளர்கள் அடுத்தடுத்த பொறுப்புகளுக்கு ஆட்களை தேர்வு செய்யும் பணியில் தற்போது தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

விஜய்
தோராயமாக 2 சட்டமன்ற தொகுதிகளுக்கு 1 மாவட்ட செயலாளர் வீதம் மொத்தம் 120 மாவட்ட செயலாளர்கள் பொறுப்பு நியமனம் செய்யப்பட்டு வருகிறது . இதுவரை 5 கட்டங்களாக 95 மாவட்ட செயலாளர் பொறுப்பு நியமனம் செய்யப்பட்டுள்ள நிலையில்  தூத்துக்குடி உள்ளிட்ட ஒரு சில மாவட்டங்களுக்கு மட்டுமே இன்னும் இழுபறி நிலை நீடித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.  

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!

மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!

தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?

செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!

தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க! 

From around the web