இன்று முதியோர்களுக்கு இலவச கண் பரிசோதனை - ட்வின்டெக் ஹெல்த்கேர் ஏற்பாடு!
சென்னையில் 70 வயதுக்கு மேற்பட்ட முதியோருக்கு இலவசமாக விரிவான கண் பரிசோதனை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.ட்வின்டெக் ஹெல்த்கேர் சர்வீசஸ் சார்பில் இந்த இலவச கண் பரிசோதனை முகாம் இன்று நடைபெறுகிறது. மேற்கு மாம்பலத்தில் உள்ள கல்பவிருக்ஷா சென்டரில் இந்த பரிசோதனை நடைபெறும்.
முகாம் நடைபெறும் முகவரி: எண் 3, நாகரத்தினம்மாள் காலனி, ஆதி கேசவ பெருமாள் கோயில் அருகில், மேற்கு மாம்பலம், சென்னை.வயது சார்ந்த கண் பிரச்சினைகளை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து, தேவையான ஆலோசனை மற்றும் வழிகாட்டுதலை வழங்கும் நோக்கத்தில் இந்த முகாம் நடத்தப்படுகிறது. சேவை முற்றிலும் இலவசம்.இந்த இலவச கண் பரிசோதனைக்கு முன்பதிவு செய்வது கட்டாயம்.
முதியவரின் பெயர், வயது மற்றும் பரிசோதனை செய்ய விரும்பும் தேதியை 97104 85295 என்ற WhatsApp எண்ணுக்கு அனுப்பி பதிவு செய்யலாம். முதியவரின் சார்பில் குடும்ப உறுப்பினர் அல்லது பராமரிப்பாளரும் முன்பதிவு செய்யலாம்.
முதியோரின் பார்வை, சுயசார்பு, நடமாட்டம் மற்றும் பாதுகாப்பை கருத்தில் கொண்டு வழக்கமான கண் பரிசோதனையின் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கும் வகையில் இந்த முயற்சி மேற்கொள்ளப்படுகிறது.சென்னையில் 70 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட முதியோர் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம்.
