ஈசிஆர் கார் சேசிங் வழக்கில் திருப்பம்... டோல்கேட்டை கடக்க திமுக கொடியைப் பயன்படுத்தியதாக துணை ஆணையர் விளக்கம்!

ஈசிஆரில் திமுக கொடிகட்டிய காரில் சென்ற மர்ம நபர்கள் அந்த வழியாக சென்ற பெண்களை மிரட்டிய விவகாரம் தமிழகம் முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தில் டோல்கேட்டை கடந்து செல்ல, கட்சி கொடியை பயன்படுத்தியதாக விசாரணையில் தெரிய வந்துள்ளதாக துணை ஆணையர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.
சென்னை கிழக்கு கடற்கரை சாலை முட்டுகாட்டில் பெண்கள் இருந்த காரை 2 கார்களில் வந்த இளைஞர்கள் காரை குறுக்கில் நிறுத்தி மடக்கி, பின் தொடர்ந்து தொல்லை கொடுத்ததாக கானத்தூர் போலீசில் வழக்குபதிவு செய்த நிலையில் தனிப்படை போலீசார் இரண்டு கார்களையும் தேடிவந்தனர்.
இந்த விவகாரத்தில் 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய பள்ளிக்கரணை போலீஸ் துணை ஆணையர் கார்த்திகேயன், “ஈ.சி.ஆர்., சம்பவத்தில் மொத்தம் 7 பேர் ஈடுபட்டுள்ளனர்; இன்னும் 3 பேர் கைது செய்யப்பட வேண்டியுள்ளது. 2 கார்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
வழக்கின் முக்கிய நபரான சந்துரு மீது கடத்தல் மற்றும் மோசடி வழக்கு உள்ளது. ஈசிஆரில் காரில் சென்ற பெண்கள் மிரட்டப்பட்ட விவகாரத்தில் டோல்கேட்டை கடந்து செல்ல கட்சி கொடியை பயன்படுத்தியதாக விசாரணையில் தெரிய வந்துள்ளது. பெண்களுக்கு பாலியல் ரீதியிலான தொல்லை இல்லை.
திமுகவுக்கும் பெண்களை காரில் துரத்திய நபர்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை. டோல்கேட் மற்றும் பார்க்கிங் கட்டணங்களைத் தவிர்க்க இந்த நபர்கள் காரில் கட்சி கொடியை கட்டியிருந்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது” எனக் கூறியுள்ளார்.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!
தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?
செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!
தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க!