பிரபல இயக்குநர் தற்கொலையில் திருப்பம்... போலீசாரிடம் சிக்கிய ஆதாரம்!

 
நிதின் தேசாய்

பிரபல பாலிவுட் இயக்குநர் நிதின் சந்திரகாந்த் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது பாலிவுட் வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.  இயக்குநர் , கலை இயக்குநர், தயாரிப்பாளர்  என பன்முக திறமை வாய்ந்தவர்  நிதின் சந்திரகாந்த் தேசாய். அடுத்த வாரம் 58வது வயது நிறைவடைய உள்ள நிலையில்   நேற்று காலை தனது ஸ்டுடியோவில் தூக்கிட்டு தற்கொலைச் செய்து கொண்டார்.  


நிதின் தேசாய் சிறந்த கலை இயக்குநராக  4  முறை தேசிய விருதுகளை வென்றவர்.  'தேவ்தாஸ்', 'ஜோதா அக்பர்', 'லகான்', 'பாஜிராவ் மஸ்தானி' உட்பட   வரலாற்றுப் பின்னணியிலான திரைப்படங்களில் தனது கலை இயக்கம் மூலம் நிதின் தேசாய் உயிர் கொடுத்துள்ளார். சுமார் 20 வருடங்களுக்கும் மேலாக பாலிவுட்டில் சேவையாற்றிய  நிதின் தேசாய், சஞ்சய் லீலா பன்சாலி, விது விநோத் சோப்ரா, ராஜ்குமார் ஹிரானி உட்பட   பிரபல இயக்குநர்களுடன் இணைந்து பணியாற்றியவர்.   15 ஆண்டுகளுக்கு முன்னர் தேசாய் கட்டமைத்த என்.டி ஸ்டுடியோவில், 'ஜோதா அக்பர்' முதலான திரைப்படங்கள் மற்றும் 'பிக் பாஸ்' நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டுள்ளன.  தேசாய் மிகவும் விருப்பமான  இதேஎ ஸ்டுடியோவில் நேற்று தற்கொலை செய்து கொண்டுள்ளார்.  

நிதின் தேசாய்


பாலிவுட்டில் அதிர்ச்சியை ஏற்படுத்திய அதே நேரத்தில் பல்வேறு   சந்தேகங்களையும் எழுப்பியது. புகழின் உச்சியில், பெரும் வாய்ப்புகள் தேடி வந்து கொண்டிருக்கும் நிலையில்  நிதின் தேசய் தற்கொலை முடிவை தேடியுள்ளார். இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.  
இதில் தனது ஸ்டுடியோ சாம்ராஜ்யத்தை உருவாக்குவதில் அகலக் கால்வைத்ததும், அதற்காக பல நூறு கோடிகளை பல்வேறு நிறுவனங்களில் கடன் பெற்றதுமே நிதின் தேசாய் தற்கொலைக்கு காரணமாக அமைந்துள்ளன.  

நிதின் தேசாய்

கொரோனா காரணமாக கடந்த 2 வருடங்களாக ஸ்டுடியோ வருமானம் இல்லாமல் கிடந்தது. அதே போல்  ஸ்டூடியோவில் ஏற்பட்ட தீவிபத்தும்  நிதின் தேசாயை மேலும் முடக்கியது. ரூ252 கோடி   கடனுடன் திவால் நிலைமைக்குச் சென்றதும், கடன் கொடுத்த நிறுவனம் ஸ்டுடியோவை கையகப்படுத்த முயற்சித்தது. இதனால் தான் கடைசியில் அதே ஸ்டுடியோவில் தனது உயிரை மாய்த்துக்கொள்ள நிதின் தேசாய் முடிவு செய்திருக்கலாம் என்கின்றது முதல் கட்ட தகவல் அறிக்கை.  

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

ஆடி மாதத்தில் புதுமணத் தம்பதியரை ஏன் பிரித்து வைக்கிறார்கள் தெரியுமா?

மாங்கல்ய தோஷம் நீங்க ஆடி மாசத்துல இதைச் செய்ய மறக்காதீங்க!

From around the web