மதுராந்தகம், தாராபுரத்தில் தவெக வேட்பாளர்கள் தொடர்ந்து முன்னிலை!

 
தாராபுரம் சத்யபாமா

தமிழகத்தில் உள்ள மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு இடையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

மதுராந்தகம் தொகுதி தவெக வேட்பாளர் மரகதம் குமரவேல் - 3,571 வாக்குகள் பெற்று தொடர்ந்து முன்னிலையில் உள்ளார். திமுக வேட்பாளர் பரந்தாமன் - 2,611 வாக்குகள்.

இடைத்தேர்தல்

அதிமுக வேட்பாளர் கணிதா சம்பத் - 2,078 வாக்குகள். 11-வது மேசையில் உள்ள ஒரு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டுள்ளதால், அங்கு வாக்குகள் எண்ணும் பணி தற்காலிகமாகத் தடையுள்ளது).

தாராபுரம் தொகுதி தவெக வேட்பாளர் சத்யபாமா - 1,350 வாக்குகள் பெற்று முன்னிலை வகிக்கிறார். திமுக வேட்பாளர் சுகன்யா - 870 வாக்குகள். அதிமுக வேட்பாளர் பானுமதி - 643 வாக்குகள்.

பிரச்சாரம் தேர்தல் இடைத்தேர்தல் வாக்குசேகரிப்பு

மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய இரண்டு தொகுதிகளிலும் நாம் தமிழர் கட்சி (நாதக) மற்றும் இடதுசார் கட்சிகள் தலா 50-க்கும் குறைவான வாக்குகளையே பெற்றுள்ளன. வாக்கு எண்ணிக்கையின் அடுத்தடுத்த சுற்று முடிவுகள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளிவரும்.