இடைத்தேர்தல் பரப்புரை - தவெக சார்பில் 40 நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியல் வெளியீடு!
வரவிருக்கும் சட்டமன்ற இடைத்தேர்தல் பரப்பு பணிகளுக்காக தமிழக வெற்றிக் கழகம் சார்பில் 40 பேர் கொண்ட நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியல் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது.
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் மற்றும் முதலமைச்சர் விஜய் தலைமையில் தேர்தல் பரப்புரை மேற்கொள்ளப்படவுள்ளது. இவருடன் கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ் கட்சியின் தலைவர் மாணிக்கம் தாகூர், விசிக தலைவர் தொல். திருமாவளவன், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, துரை வைகோ, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் காதர் மொய்தீன் உள்ளிட்ட கூட்டணிக் கட்சித் தலைவர்களும் இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.

மேலும், தவெகவின் முக்கிய நிர்வாகிகளான ஆதவ் அர்ஜுனா, கே.ஜி. அருண்ராஜ், கே.ஏ. செங்கோட்டையன், சி.டி.ஆர். நிர்மல் குமார், ராஜ்மோகன், ரமேஷ், ஸ்ரீநாத் உள்ளிட்டோரின் பெயர்களும் நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன.
மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய சட்டமன்றத் தொகுதிகளுக்கு நடைபெறவுள்ள இடைத்தேர்தலில் தவெக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளின் வெற்றியை உறுதி செய்யும் வகையில், இந்த நட்சத்திர பேச்சாளர்கள் குழுவினர் தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட உள்ளனர்.
