ஒரே அமரர் ஊர்தியில் 2 சடலங்கள்... அரசு மருத்துவமனை ஊழியர்களின் அலட்சியம்... கதறும் உறவினர்கள்!

 
 ஒரே அமரர் ஊர்தியில் 2 சடலங்கள்... அரசு மருத்துவமனை ஊழியர்களின் அலட்சியம்...  கதறும் உறவினர்கள்!

தமிழகத்தில் விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் வசித்து வருபவர்  பாண்டிபிரபு. இவர் திருப்பூர் எஸ்.வி.காலனியில்  டிரைவராக வேலை செய்து வந்தார். அங்கு கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டதால் மனைவி தனது தாயார் வீட்டுக்கு சென்றார்.

 

இதில் மனம் உடைந்த பாண்டிபிரபு செப்டம்பர்  11ம் தேதி வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் குறித்து   போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.  பாண்டிபிரபுவின் உடல் திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு 108 அமரர் ஊர்தி மூலமாக சொந்த ஊருக்கு கொண்டு செல்ல ஏற்பாடு செய்யப்பட்டது. அமரர் ஊர்தியில் ஏற்கனவே விருதுநகரை சேர்ந்த ஒருவரின் உடல் ஏற்றி வைக்கப்பட்டு இருந்த  நிலையில், அதே அமரர் ஊர்தியில் பாண்டிபிரபுவின் உடலை மருத்துவமனை ஊழியர்கள் ஏற்ற முயற்சி செய்தனர்.  இதற்கு பாண்டிபிரபுவின் தந்தை துரைராஜ், கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.  

 

அமரர் ஊர்தியின் அவலத்தை வீடியோ எடுத்து வெளியிட்டு நியாயம் கேட்டார். இந்த வீடியோ சமூகவலைதளங்களில் வேகமாக பரவி கடும் கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டன. இச்சம்பவத்தால் சிறிது நேரம் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.இச்சம்பவம் குறித்து  திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி டீன் முருகேசன் , '108 அமரர் ஊர்தியை கால்சென்டரில் பதிவு செய்து அவர்கள்தான் ஊர்தியை ஒதுக்கீடு செய்வார்கள்.

விருதுநகர் வரை செல்லும் ஊர்தியில் பாண்டிபிரபுவின் உடலை எடுத்துச்செல்ல அவருடைய தந்தை முதலில் சம்மதம் தெரிவித்துள்ளார். அதன்பிறகு எதிர்ப்பு தெரிவித்ததால், கால்சென்டர் மூலமாக தனி ஊர்தி ஒதுக்கீடு செய்யப்பட்டு உடலை அனுப்பி வைத்தனர்' என விளக்கம் அளித்துள்ளார்.

From around the web