சகோதரர்கள் இருவர் அரிவாளால் வெட்டிப் படுகொலை - சிதம்பரத்தில் பரபரப்பு!

 
சிதம்பரம் இரட்டைக் கொலை

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே இரண்டு சகோதரர்கள் மர்மநபர்களால் கொடூரமான முறையில் அரிவாளால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அச்சத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள பால்வார்த்துண்ணான் பகுதியில் இக்கோர சம்பவம் நிகழ்ந்துள்ளது.

சிதம்பரம் பால்வார்த்துண்ணான் பகுதியைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் (44) மற்றும் அவரது தம்பி ராமகிருஷ்ணன் (35) ஆகிய இருவரும் சம்பவ இடத்தில் வெட்டப்பட்டுப் பலியாகியுள்ளனர். சகோதரர்கள் இருவரையும் மர்மநபர்கள் சிலர் திடீரென அரிவாளால் சரமாரியாக வெட்டிப் படுகொலை செய்துவிட்டுத் தப்பியோடிவிட்டனர்.

இச்சம்பவம் குறித்துத் தகவல் அறிந்து விரைந்து வந்த காவல்துறையினர், உடல்களைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், முன்விரோதம் காரணமாக இந்தக் கொலை நடந்ததா என்ற கோணத்தில் வழக்குப்பதிவு செய்து, தப்பியோடிய கொலையாளிகளைத் தீவிரமாக வலைவீசித் தேடி வருகின்றனர்.