இரு சிறுமிகளுக்கு பாலியல் வன்கொடுமை.. கொந்தளித்து ரயில் நிலையத்தை முற்றுகையிட்ட மக்கள்!
மகாராஷ்டிர மாநிலம் பத்லாபூரில் இரண்டு சிறுமிகளை பள்ளி துப்புரவு பணியாளர் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்ததாக புகார் எழுந்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் பத்லாபூர் ரயில் நிலையம் சென்று ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மகாராஷ்டிர மாநிலம் தானே மாவட்டத்தில் உள்ள பள்ளி ஒன்றில் நான்கு வயது சிறுமிகள் இருவர் பள்ளி துப்புரவுத் தொழிலாளியால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளனர்.
VIDEO | People gather in huge number demanding justice after a school sweeper in Maharashtra's Badlapur was arrested for assaulting two young girls. Here's what DCP Sudhakar Pathare said:
— Press Trust of India (@PTI_News) August 20, 2024
(Full video available on PTI Videos - https://t.co/dv5TRARJn4) pic.twitter.com/of9gvxlMuX
மழலையர் பள்ளியில் மூன்று மற்றும் நான்கு வயதுடைய இரண்டு சிறுமிகளை துஷ்பிரயோகம் செய்ததாக பள்ளியின் துப்புரவு பணியாளரை தானே போலீசார் கைது செய்தனர். இச்சம்பவத்தை கண்டித்து நூற்றுக்கணக்கான பெற்றோர்கள் மற்றும் அப்பகுதி மக்கள் ரயில் நிலையத்தில் போராட்டம் நடத்தினர். போராட்டங்களுக்கு மத்தியில், மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, பத்லாபூரில் நடந்த சம்பவத்தை தான் தீவிரமாக எடுத்துக்கொள்வதாக கூறினார்.
“இந்த விவகாரத்தில் ஏற்கனவே ஒரு சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டுள்ளது, சம்பவம் நடந்த பள்ளிக்கு எதிராக நாங்கள் நடவடிக்கை எடுக்க உள்ளோம். வழக்கை விரைவுபடுத்த நாங்கள் பணியாற்றி வருகிறோம், குற்றம் நிரூபிக்கப்பட்டால் யாரையும் காப்பாற்ற மாட்டோம், ”என்று ஏக்நாத் ஷிண்டே கூறினார்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!
பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!