பாகிஸ்தானில் ராணுவ விமானம் விபத்து - விமானி உள்பட இருவர் பலி!

 
பாகிஸ்தான்  விமானம் விபத்து

பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணம் குவாட்டா நகரில் நடைபெற்ற விமான விபத்தில் இரண்டு ராணுவ வீரர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

குவாட்டா நகரில் வழக்கமான பயிற்சியில் ஈடுபட்டிருந்த சிறிய ரக ராணுவ விமானம் ஒன்று, திடீரெனக் கட்டுப்பாட்டை இழந்து தரையில் விழுந்து விபத்துக்குள்ளானது.

இக்கோர விபத்தில் விமானத்தில் பயணித்த விமானி மற்றும் துணை விமானி ஆகிய இருவரும் உடல் கருகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். தொழில்நுட்பக் கோளாறு காரணமாகவே இந்த விபத்து நேரிட்டுள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ள நிலையில், இதுகுறித்து அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.