ஒரு பெண்ணுக்காக இருவர் போட்டி.. மோதலில் டெம்போ டிரைவர் கொடூர கொலை.. போதையில் கும்பல் வெறிச்செயல்!

 
குமாரவேல்

சேலம் மாவட்டம் காட்டுவளவு பகுதியைச் சேர்ந்த மோகனின் மகன் குமாரவேல், டெம்போ டிரைவராக உள்ளார். வீராணம் பகுதியில் உள்ள விவசாய தோட்டங்களில் இருந்து பூ மூட்டைகளை வாங்கி சேலம் வ.உ.சி. சந்தைக்கு டெம்போவில் கொண்டு வந்து வந்தார். குமாரவேல் தனது உறவினரை காதலித்து 6 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார்.

காவலர்கள் இருவர் உல்லாசம்

ஆனால், சில மாதங்களுக்குள், அவர்களுக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, அவரது மனைவி அவரை விட்டு பிரிந்து சென்றார். இதற்கிடையில், குமாரவேல் அதே பகுதியைச் சேர்ந்த வேறு பெண்ணுடன் தொடர்பு கொண்டிருந்தார். அவர் அடிக்கடி அப்பெண்ணை தனியாக சந்தித்து ஒன்றாக தங்கினார். அதே நேரத்தில், வீராணம், துளசிமணியனூரில் வசிக்கும் பிரகாஷுடனும் அந்தப் பெண் தொடர்பு கொண்டிருந்தார். இதன் காரணமாக, அவர் அடிக்கடி அந்தப் பெண்ணின் வீட்டிற்கும் சென்று வந்தார். இதை அறிந்த குமாரவேல், பிரகாஷை கண்டித்தார். இதன் காரணமாக, அவர்களுக்கு இடையே அடிக்கடி தகராறுகள் ஏற்பட்டுள்ளன.

இந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு 9 மணியளவில், அப்பகுதியில் உள்ள துளசிமணியனூர் அய்யனாரப்பன் கோயில் அருகே குமரவேல் மது அருந்திக்கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது. அந்த நேரத்தில், வீமனூரைச் சேர்ந்த மாணிக்கம் மற்றும் தி.பெரும்பாளையத்தில் உள்ள வயக்கரனூரைச் சேர்ந்த கனகராஜ் ஆகிய பிரகாஷ் மற்றும் அவரது நண்பர்கள் வந்திருந்தனர். அவர்கள் குமாரவேலுடன் வாக்குவாதம் செய்து, சம்பந்தப்பட்ட பெண்ணுடனான உறவை கைவிடுமாறு கூறினர். திடீரென்று, அவர்கள் குமாரவேலைத் தாக்கி, அவரை கீழே தள்ளிவிட்டு, கத்தியால் கழுத்தை அறுத்தனர்.

பின்னர், பிரகாஷ் உட்பட மூன்று பேர் சம்பவ இடத்திலிருந்து தப்பி ஓடிவிட்டனர். குமாரவேலின் உறவினர்கள் சம்பவ இடத்திற்கு வந்து குமாரவேலின் உடலைப் பார்த்து கதறி அழுதனர். கொலை குறித்து தகவல் அறிந்த வீராணம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து குமாரவேலின் உடலைக் கைப்பற்றி விசாரணை நடத்தினர். பின்னர், சடலம் சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பப்பட்டது. கொலையில் தொடர்புடைய பிரகாஷ் மற்றும் அவரது நண்பர்கள் மாணிக்கம் மற்றும் கனகராஜ் ஆகியோர் நள்ளிரவில் கைது செய்யப்பட்டனர். குற்றம் சாட்டப்பட்டவர்கள் காவல் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டு விசாரணை நடத்தினர். பிரகாஷ் பரபரப்பு வாக்குமூலம் அளித்தார்.

போலீசார் கூறுகையில், "முதலில், குமாரவேல் அந்தப் பெண்ணுடன் உறவு கொண்டிருந்தார். பின்னர், பிரகாஷ் அந்தப் பெண்ணுடனும் உறவை ஏற்படுத்திக் கொண்டார். இதனால், இருவருக்கும் அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டது. சம்பவம் நடந்த நாளில், குமாரவேல் அய்யனாரப்பன் கோயில் அருகே உள்ள ஓடையில் மது அருந்திக் கொண்டிருந்தார். அப்போது, ​​பிரகாஷ் மற்றும் மூவரும் குடிபோதையில் வந்து, அந்தப் பெண்ணுடன் எந்தத் தொடர்பும் கொள்ள வேண்டாம் என்று மிரட்டினர்.

கைது

இந்த மோதலில், நாங்கள் குமாரவேலை கீழே தள்ளி, அவரது கழுத்தை அறுத்து கொன்றோம்," என்று  கூறியதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட பிரகாஷ் மீது தாக்குதல், கொள்ளை, கஞ்சா உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன. ரவுடி பட்டியலில் உள்ள பிரகாஷ், குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் ஒரு முறை கைது செய்யப்பட்டு, போலீசாரால் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். தற்போது, ​​கொலை வழக்கில் பிரகாஷ் மற்றும் இரண்டு கூட்டாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட மூவரும் சேலம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். ஒரு பெண்ணுடன் தகாத உறவில் ஈடுபட்ட இரண்டு ஆண்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் டெம்போ டிரைவர் கொல்லப்பட்ட சம்பவம் சேலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!

மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!

தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?

செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!

தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க! 

From around the web