ஏரிக்குள் ஜீப்பை நிறுத்தி குடித்துவிட்டு தூங்கிய 2 பேர்! நள்ளிரவில் நடந்த அதிர்ச்சி...!

 
ஜீப்

 

தர்மபுரி: ஏரிக்குள் ஜீப்பை நிறுத்திவிட்டு மது அருந்திய 2 வாலிபர்கள், நள்ளிரவில் பெய்த கனமழையால் ஜீப் தண்ணீரில் மூழ்கிய நிலையில் சிக்கிய சம்பவம் தர்மபுரி மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி அருகே குமாரசெட்டி ஏரி உள்ளது. இங்கு 2 வாலிபர்கள் ஜீப்பில் சென்றுள்ளனர். அப்போது ஏரியில் குறைவான அளவே தண்ணீர் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் ஏரிக்குள் ஜீப்பை நிறுத்திய அவர்கள், அங்கேயே மது அருந்தியதாக தெரிகிறது.

ஆம்புலன்ஸ்

பின்னர் இருவரும் மதுபோதையில் ஜீப்புக்குள்ளேயே தூங்கியுள்ளனர். இந்த நிலையில், நள்ளிரவில் எதிர்பாராத வகையில் கனமழை பெய்துள்ளது. இதனால் ஏரிக்கு திடீரென நீர்வரத்து அதிகரித்து, நீர்மட்டம் வேகமாக உயர்ந்துள்ளது.

தூங்கிக் கொண்டிருந்த இருவருக்கும் சிறிது நேரத்துக்குப் பிறகு விழிப்பு ஏற்பட்டுள்ளது. அப்போது ஜீப் தண்ணீரில் மூழ்கிக் கொண்டிருப்பதை பார்த்து இருவரும் அதிர்ச்சி அடைந்தனர்.இதையடுத்து அவர்கள் உடனடியாக அப்பகுதி பொதுமக்களின் உதவியை நாடினர். தகவல் அறிந்த பொதுமக்கள் பொக்லைன் எந்திரத்தை வரவழைத்து, கயிறு கட்டி தண்ணீரில் மூழ்கியிருந்த ஜீப்பை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.

மருத்துவமனை ஆம்புலன்ஸ் போலீஸ் கொலை கத்திக்குத்து

நீண்ட நேர போராட்டத்துக்குப் பிறகு ஜீப் ஏரியில் இருந்து வெளியே மீட்கப்பட்டது. இருவரும் பொதுமக்களின் உதவியுடன் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்.நீரில் மூழ்கிய ஜீப்பை பொக்லைன் எந்திரம் மூலம் பொதுமக்கள் மீட்கும் காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வருவதாக தினத்தந்தி செய்தி தெரிவிக்கிறது.