ஆடி மாசத்துல ரெண்டு அமாவாசை... தர்ப்பணம் செய்வது எப்போ... எப்படி? முழு விபரம்!

 
தமிழக முக்கிய ஆன்மிக தலயங்களில், இன்று தர்ப்பணம், தரிசனத்துக்கு தடை! பொதுமக்கள் அதிருப்தி!

இந்த வருடம் ஆடி மாதத்தில் இரண்டு அமாவாசை திதிகள் வருகின்றன. எதைச் சாப்பிட்டால் பித்தம் தெளியும் என்று இருக்கிற காலத்தில் கவனிக்காமல், இப்போது பித்ரு தோஷத்திற்கு ஆளானவர்கள் பயபக்தியுடன் அதிகாலையிலேயே எழுந்து, குளித்து தர்ப்பணம் தருவதற்காக வரிசையில் நிற்பதைப் பல இடங்களில் பார்க்கலாம். ஆனால், இப்படி மாதத்தில் இரண்டு அமாவாசைகள் வருகின்ற தினங்களில் இரண்டாவதாக வருகின்ற அமாவாசை திதிகளே தர்ப்பணம் தருவதற்கு ஏற்றவையாக கருதப்படுகிறது.

ஆடி மாதத்தின் முதல் நாளான இன்று ஜூலை 17ம் தேதி வருகின்ற அமாவாசை திதியைப் போன்றே ஆடி மாதத்தின் கடைசி தினமான 31ம் தேதி அதாவது ஆகஸ்ட் 16ம் தேதி இந்த மாதத்தின் இரண்டாவது அமாவாசை திதி வருகிறது. எனவே ஆடி அமாவாசையாக தர்ப்பணம் செய்வதற்கு உகந்த திதியாக நாம் இரண்டாவதாக வருகின்ற ஆகஸ்ட் 16ம் தேதியையே ஆடி அமாவாசை தினமாக கொள்ள வேண்டும். 

தமிழக முக்கிய ஆன்மிக தலயங்களில், இன்று தர்ப்பணம், தரிசனத்துக்கு தடை! பொதுமக்கள் அதிருப்தி!

அதே சமயம் இன்று ஆடி பிறப்பு என்பதால் அதிகாலையில் எழுந்து வீட்டை சுத்தப்படுத்தி, வீட்டு வாசலில் மஞ்சள் நீர் தெளித்து, கோலமிட வேண்டும். பூஜை அறையில் உள்ள சுவாமி படங்களை சுத்தம் செய்து, பூக்களால் அலங்கரிக்க வேண்டும். வீட்டின் நிலை வாசலில் மாவிலை, வேப்பிலையால் தோரணம் கட்ட வேண்டும்.

அம்மனை வீட்டிற்கு வரவேற்கும் விதமான சிவப்பு, மஞ்சள் அல்லது பச்சை நிறத்தில் புது வஸ்திரம் வாங்கி ஒரு தட்டில் வைத்து, மஞ்சள், குங்குமம், வெற்றிலை பாக்கு, பழம், மஞ்சள் கயிறு, வளையல் போன்ற மங்கள பொருட்களை வைத்து, ஏதாவது நைவேத்தியம் படைத்து வழிபட வேண்டும்.

அமாவாசை பித்ரு தர்ப்பணம்

யாருக்கெல்லாம் தர்ப்பணம் செய்ய வேண்டும் என்பது பற்றிப் நம்மில் பலருக்கும் சந்தேகம் இருக்கும். மறைந்த தகப்பனார், தாத்தா, கொள்ளுத் தாத்தா, அம்மா, பாட்டி, கொள்ளுப் பாட்டி, அம்மாவின் கோத்திரம் - அவர்களின் பரம்பரை, அப்பாவின் கோத்திரம் - அவர்களின் பரம்பரை என்று பன்னிரண்டு பேர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க வேண்டும். மேலும், யாருமில்லாத ஆதரவற்று இறந்தவர்களுக்கும் தர்ப்பணம் செய்வது மிகவும் விசேஷமாக சாஸ்திரங்களில் சொல்லப்பட்டிருக்கிறது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

இந்த 5 ராசிக்காரர்களுக்கு ஜூலை முழுவதுமே அதிர்ஷ்டம் தான்!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

ஆடி மாதத்தில் புதுமணத் தம்பதியரை ஏன் பிரித்து வைக்கிறார்கள் தெரியுமா?

From around the web