715 மதிப்பெண்கள் பெற்று நீட் மறுதேர்வில் இரு மாணவர்கள் தேசியளவில் முதலிடம்!

 
நீட்

தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ள இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு முடிவுகளின்படி, பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநிலங்களைச் சேர்ந்த இரண்டு மாணவர்கள் தலா 715 மதிப்பெண்கள் பெற்று தேசிய அளவில் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளனர். இந்த ஆண்டிற்கான நீட் தேர்வு முடிவுகளில், கடுமையான போட்டிக்கு மத்தியில் முதலிடத்தை இரு மாணவர்கள் பகிர்ந்து கொண்டுள்ளனர்.

பஞ்சாப் மற்றும் ஹரியானாவைச் சேர்ந்த இரு மாணவர்கள் தலா 715 மதிப்பெண்கள் பெற்று அகில இந்திய அளவில் முதலிடத்தைப் பிடித்துள்ளனர். ஒட்டுமொத்த தேர்ச்சி விகிதத்தில் வழக்கம் போல் இந்த ஆண்டும் மாணவர்களை விட மாணவிகளே அதிக அளவில் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர். தேர்வு எழுதியவர்களில் மாணவிகள் 56.8% பேரும், மாணவர்கள் 55.1% பேரும் தேர்ச்சி பெற்று மருத்துவக் கலந்தாய்விற்குத் தகுதி பெற்றுள்ளனர்.

நீட்

தேர்வு எழுதிய மாணவர்கள் தங்களது அதிகாரப்பூர்வ மதிப்பெண் அட்டைகளைத் தேசிய தேர்வு முகமையின் இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மாணவர்கள் neet.nta.nic.in என்ற இணையப் பக்கத்திற்குச் சென்று தங்களது மதிப்பெண்களைச் சரிபார்த்துக் கொள்ளலாம்.

இணையதளத்தில் தங்களது விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதி  ஆகிய விவரங்களைக் குறிப்பிட்டு மதிப்பெண் சான்றிதழைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, தகுதி பெற்ற மாணவர்களுக்கான மருத்துவக் கலந்தாய்வு குறித்த அறிவிப்புகள் விரைவில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.