2 எஸ்யூவி கார்கள் நேருக்கு நேர் மோதி 2 பேர் பலி... நெஞ்சை உறைய வைக்கும் வீடியோ!
ஆந்திரப் பிரதேச மாநிலம் காக்கிநாடா மாவட்டத்தில் நிகழ்ந்த பயங்கர சாலை விபத்தில் 2 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். சாலையைக் கடக்க முயன்ற முதியவர் மீது மோதாமல் இருக்க, நீல நிற எஸ்யூவி கார் ஓட்டுநர் காரை திடீரென எதிர்த்திசையில் திருப்பியதாகக் கூறப்படுகிறது.
அப்போது எதிரே வந்த மற்றொரு எஸ்யூவி கார் மீது அந்தக் கார் நேருக்கு நேர் மோதியுள்ளது. இந்தக் கோர மோதலில் அருகே சென்று கொண்டிருந்த இருசக்கர வாகன ஓட்டுநரும் தூக்கி வீசப்பட்டார்.
இந்த விபத்தில் 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், 3 பேர் பலத்த காயமடைந்து சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்து தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தேசிய விபத்து மற்றும் முக்கியச் செய்திகளைத் தினமாலை.காம் தளத்தில் உடனுக்குடன் அறிந்து கொள்ளலாம்.
