நேருக்கு நேர் மோதிக்கொண்ட இருசக்கர வாகனங்கள்... இளம்பெண் உயிரிழப்பு; வாலிபர் படுகாயம்!

 
இளம்பெண் விபத்து இளம்பெண் விபத்து

ஆந்திர மாநிலம் அல்லூரி சீதாராமராஜு மாவட்டத்தில், தேசிய நெடுஞ்சாலையில் மாடுகள் மோதிக்கொண்டதால் ஏற்பட்ட அடுத்தடுத்த விபத்துகளில் சிக்கி பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ராஜாவொம்மங்கி மண்டலம், சரபாவரம் பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் நேற்று இரவு கால்நடைகள் (மாடுகள்) கூட்டமாக நின்றுகொண்டிருந்தன. அப்போது மாடுகள் திடீரென ஒன்றோடு ஒன்று முட்டிக்கொண்டு மிரண்டு ஓடியதால், அந்த வழியாக வந்த இரண்டு மோட்டார் சைக்கிள்கள் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளாகின.

பைக்

கோலுகொண்டா மண்டலம், மல்லம்பேட்டை கிராமத்தைச் சேர்ந்த சீதா என்ற பெண், தனது இருசக்கர வாகனத்தில் சென்றபோது மாடுகள் மோதியதில் நிலைதடுமாறி விழுந்தார். இதில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

மற்றொரு விபத்தில், ராஜாவொம்மங்கியில் இருந்து பண்டமவில்லு நோக்கிச் சென்று கொண்டிருந்த ஃபனிந்திர குமார் என்பவரும் மாடுகள் மோதி விபத்தில் சிக்கினார். படுகாயமடைந்த அவர் உடனடியாக மீட்கப்பட்டு, சிகிச்சைக்காக நர்சிப்பட்டணம் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.

பைக்

தேசிய நெடுஞ்சாலைகளில் கால்நடைகள் சுற்றித் திரிவதைத் தடுக்கவும், இரவு நேரங்களில் போதிய வெளிச்சம் இல்லாததால் ஏற்படும் இத்தகைய விபத்துகளைக் குறைக்கவும் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.