நேருக்கு நேர் மோதிக்கொண்ட இருசக்கர வாகனங்கள்.. 2 இளைஞர்கள் பரிதாப பலி!

 
உளிமங்கலம்  விபத்து

கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அருகேயுள்ள கிறிஸ்துபாளையம் கிராமத்தைச் சேர்ந்த சவுரியப்பன் மகன் ஸ்டீபன் (25). குளிர்பான வினியோகஸ்தராக பணியாற்றி வந்த இவரும், சங்ககிரியில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வரும் பிரவீன் பால்ராஜ் (25) இருவரும் இருசக்கர வாகனத்தில் தேன்கனிக்கோட்டை தளி சாலையில் உள்ள கோட்டை உளிமங்கலம் பகுதிக்கு சென்றுள்ளனர்.

அப்போது அவர்கள் சென்ற இருசக்கர வாகனம், தேன்கனிக்கோட்டை அருகே சீனிவாசபுரம் கிராமத்தைச் சேர்ந்த சஞ்சய் (22) ஓட்டிச் சென்ற இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இந்த விபத்தில் பலத்த காயமடைந்த ஸ்டீபன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் சஞ்சய் உயிரிழந்தார்

பலத்த காயமடைந்த பிரவீன் பால்ராஜ் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். விபத்து குறித்து தேன்கனிக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பங்குனி உத்திரத்தின் மகத்துவம் தெரிஞ்சுக்கோங்க..!

பங்குனி மாத பண்டிகைகள், விசேஷ நாட்கள்.... முழு பட்டியல்!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்

From around the web