அமைச்சர் மா.சுப்பிரமணியனுடன் 'ஜாகிங்' சென்ற யு.ஏ.இ அமைச்சர்!

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (யு.ஏ.இ) பொருளாதார அமைச்சர் அப்துல்லா பின் டூக் அல் மர்ரி சென்னை வந்துள்ள நிலையில், தமிழக அமைச்சர் மா.சுப்பிரமணியனுடன் சேர்ந்து சாலையில் ஜாகிங் சென்ற வீடியோ வைரலாகியுள்ளது.சென்னையில் நேற்று'இன்வெஸ்டோபியா குளோபல் டாக்ஸ்' என்ற மாநாடு நடைபெற்றது.
#Chennai | UAE Minister of Economy Abdulla bin Touq Al Marri joins #TamilNadu Health Minister #MASubramanian for a jogging session
— The Times Of India (@timesofindia) July 24, 2024
UAE Minister for Economy, Abdulla bin Touq Al Marri has come to India along with UAE delegates and investors to attend 'Investopia Global Talks' in… pic.twitter.com/fHV6vZRBeH
இதற்காக ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (யு.ஏ.இ) பொருளாதார அமைச்சர் அப்துல்லா பின் டூக் அல் மர்ரி தலைமையில் அந்நாட்டின் பிரதிநிதிகள் மற்றும் முதலீட்டாளர்கள், இந்தியாவுக்கு அரசுமுறை பயணம் மேற்கொண்டுள்ளனர். அவர்களில் யு.ஏ.இ அமைச்சர் அப்துல்லா பின் டூக் அல் மர்ரி மற்றும் அந்நாட்டினர் சிலர், சென்னை பெசன்ட் நகரில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனுடன் சேர்ந்து நேற்று காலை 'ஜாகிங்' சென்ற வீடியோ வைரலாகியுள்ளது.
பின்னர் சாலையோர டீ கடையில் அமர்ந்து, அனைவரும் டீ குடித்தனர். அமைச்சர் உள்ளிட்ட பிரதிநிதிகள் மாநாட்டில் பங்கேற்பதற்கு முன்னதாக தமிழக முதல்வர் ஸ்டாலினை சந்தித்து ஆலோசனை நடத்த உள்ளனர். ஜாகிங் சென்றது குறித்து அப்துல்லா செய்தியாளர்களிடம் பேசுகையில், “தமிழக அமைச்சருடன் ஓட்டப் பயிற்சி மேற்கொண்டது மகிழ்ச்சியான தருணம். யு.ஏ.இ மற்றும் இந்தியா இடையேயான பொருளாதார உறவுகள், மிகப்பெரிய பொருளாதார உறவுகளில் ஒன்று என்றார். இன்று காலை அப்துல்லா கேரளா புறப்பட்டு சென்றார்.