”உதய் அண்ணா சட்டரீதியாக எதிர்கொண்டு வெளியே வருவார்” - மேயர் பிரியா ஆவேசம்!

 
பிரியா

எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைதைக் கண்டித்து சென்னை ஒட்டேரியில் சென்னை மாநகராட்சி மேயர் பிரியா தலைமையில் திமுகவினர் சாலையில் அமர்ந்து தீவிரப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட திமுகவினர் மீது காவல்துறை நடத்திய தடிடியைக் கண்டித்துப் பேசிய மேயர் பிரியா, "போராட்டம் நடத்தும் திமுக தொண்டர்கள் மீது லத்தி சார்ஜ் செய்ய நாங்கள் என்ன தீவிரவாதியா? தியேட்டருக்குச் சென்று ஜனநாயகன் படம் பார்த்து அழுகிறார்கள்; ஆனால் நிஜத்தில் ரத்தம் வரும் அளவிற்குப் காவல்துறையை வைத்து அடிக்கிறார்கள். இதுதான் ஜனநாயகமா?" எனக் கேள்வி எழுப்பினார்.

க்ட்ச்க்

"காவல்துறை கையில் இருக்கிறது என்பதற்காக என்ன வேண்டுமானாலும் செய்வீர்களா? இந்த அராஜகத்திற்கு திமுக ஒருபோதும் அஞ்சாது. தவெக கட்சியினர் பல தவறுகளைச் செய்யும்போது, எந்தத் தவறும் செய்யாத உதயநிதி ஸ்டாலினைக் கைது செய்திருப்பதை வன்மையாகக் கண்டிக்கிறேன்" என்று கூறினார்.

கைதுகளுக்குப் பயப்படுகிறவர்கள் திமுகவினர் அல்ல எனக் குறிப்பிட்ட அவர், "உதய் அண்ணா இந்த வழக்குகளைச் சட்டரீதியாக எதிர்கொண்டு உறுதியாக வெளியே வருவார். ஆளுங்கட்சியின் இந்த அராஜக அரசியலைக் கண்டு நாங்கள் ஒருபோதும் பின்வாங்க மாட்டோம்" எனத் தெரிவித்தார். இப்போராட்டம் காரணமாக ஒட்டேரி பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டுப் பரபரப்பான சூழல் நிலவியது.