திமுகவின் அசைக்க முடியாத ஆணிவேர் அண்ணா.... துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் புகழாரம்!

 
உதயநிதி ஸ்டாலின்

 இன்று பிப்ரவரி 3ம் தேதி அறிஞர் அண்ணா நினைவு நாளையொட்டி தமிழகம் முழுவதும் பல்வேறு அரசியல் கட்சிகள் அவருக்கு புகழ் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அந்த வகையில் திமுக சார்பில் முதல்வர் தலைமையில்  வாலாஜா சாலையில் இருந்து பேரணியாக சென்று அண்ணா நினைவிடத்தில் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.  

அண்ணா நினைவு நாளையொட்டி துணை முதல்வர்  உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் வலைதளத்தில் ”  தமிழ்நாட்டை எதிரிகளால் நெருங்க முடியாத திராவிட அரசியல் கோட்டையாகக் கட்டியெழுப்பிய பெருந்தகை! உலக அரசியல் வரலாறு தொடங்கி உள்ளூர் நடப்புகள் வரை தமது தம்பிகளுக்கு நாள்தோறும் பாடம் நடத்திய அண்ணன்! எப்பேர்ப்பட்ட பகைவர்களையும் வாதத் திறமையால் தன் பக்கம் ஈர்க்கும் ஆற்றல்மிக்க சொற்பொழிவாளர்!

அறிஞர் அண்ணா

ஜனநாயக வழியில் இவ்வளவு சாதிக்க முடியுமா என்று உலக அரசியல் ஆராய்ச்சியாளர்களின் புருவம் உயர்த்தியப் பேரறிஞர்!  தி.மு.கழகம் என்னும் அசைக்க முடியாத ஆலமரத்தின் ஆணிவேர் பேரறிஞர் அண்ணா அவர்களின் 56வது நினைவு நாள் இன்று! முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திருவல்லிக்கேணி வாலாஜா சாலையில் இருந்து பேரணியாகச் சென்று அண்ணா நினைவிடத்தில் மலர்தூவி மரியாதை செலுத்தினோம். அவர் தம்பி முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் நினைவிடத்திலும் மலர்தூவி மரியாதை செலுத்தினோம். அண்ணாவின் புகழ் ஓங்கட்டும்! எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!

மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!

தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?

செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!

தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க! 

From around the web