மொழிப்போர் தியாகிகள் புகழ் ஓங்கட்டும்... உதயநிதி ஸ்டாலின் வீர வணக்கம்!

 
உதயநிதி ஸ்டாலின்
 


 இன்று ஜனவரி 25ம் தேதி மொழிப்போர் தியாகிகள் தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது.இதனையடுத்து தமிழக தலைவர்கள் அறிக்கை வெளியிட்டு வருகின்றனர். அந்த வகையில் துணைமுதல்வர் உதயநிதி ஸ்டாலின் மொழிப்போர் தியாகிகள் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார்.  இது குறித்து அவர் வெளியிட்ட பதிவில் “தமிழ்நாட்டுக்குள் நுழைய ஓயாது ஓலமிட்டு வந்த இந்தியைத் தங்கள் இன்னுயிரைக் கொடுத்துத் தடுத்த மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்தும் நாள் இன்று!

கட்டாய இந்தித் திணிப்புக்கு எதிரானப் போர்க்களத்தில் சிறைப்பட்டு மாண்ட மொழிப்போர் தியாகிகள் தாளமுத்து - நடராசன் ஆகியோரின் நினைவிடங்கள் அமைந்துள்ள சென்னை மூலக்கொத்தளத்தில் மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  அவர்களுடன் நாமும் மரியாதை செலுத்தினோம்.

ஸ்டாலின்


இத்தியாகிகளின் புதுப்பிக்கப்பட்ட நினைவிடத்தை திறந்து வைத்த நம் முதலமைச்சர் அவர்களே உணர்ச்சித் ததும்ப வீரவணக்க முழக்கமிட்டது, நம் லட்சியப்பாதையின் உறுதிக்கு சான்று. தாளமுத்து – நடராசன் திருவுருவப்படங்களுக்கு மலர் தூவி மரியாதை செய்து, மொழிப்போர் வீராங்கனை டாக்டர் தர்மாம்பாள் நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினோம். மொழிப்போர் தியாகிகள் புகழ் ஓங்கட்டும்” என பதிவிட்டுள்ளார்.  

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!

மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!

தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?

செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!

தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க! 

From around the web