சட்டப்பேரவையில் பேசியதை திரும்ப பெற்ற எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் !

 
உதயநிதி

 

முதலமைச்சர் விஜய் இன்று 110 விதிகளின் கீழ் கடந்த ஆட்சியில் நடந்த வழக்குகளை ரத்துசெய்வதாக அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இதுகுறித்துச் சட்டப்பேரவையில் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், 110 விதியின் கீழ் முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கைது வழக்குகளை ரத்து செய்வதாக அறிவிப்பு வெளியிடவில்லை எனத் தெரிவித்தார்.

உதயநிதி நிர்மல் உதய்நிர்மல்

இதற்கான சரியான ஆதாரத்தைச் சபாநாயகர் உடனடியாக அவையில் காட்டியவுடன், தனது தவறை உணர்ந்த அவர் 110 விதியின் கீழ் தான் மு.க.ஸ்டாலின் வழக்குகளை ரத்து செய்வதாக அறிவித்தார் எனக் கூறித் தனது கருத்தைத் திரும்பப் பெற்றுக்கொண்டார்.

உதயநிதி

எதிர்க்கட்சித் தலைவர் தனது கருத்தைத் உடனடியாகத் திரும்பப் பெற்றதை அடுத்து, அவை நாகரிகத்தைக் கடைப்பிடித்த அவரைச் சபாநாயகர் பாராட்டியுள்ளார். இந்தச் சம்பவம் சட்டப்பேரவையில் சிறிது நேரம் பரபரப்பையும் சுவாரஸ்யத்தையும் ஏற்படுத்தியது.