கனிமொழி மீது உதயநிதி புகார்.. திமுகவில் பரபரப்பு.. வெளிச்சத்துக்கு வரும் மோதல் போக்கு!

 
கனிமொழி கனிமொழிஉதயநிதி

திமுகவில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி இடையே உட்கட்சி மோதல் வெடித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

சமீபத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தல் தோல்விக்குப் பிறகு, கனிமொழி மாநில அரசியலில் தீவிர கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

உதயநிதி ஸ்டாலின் உதயநிதிஸ்டாலின்

இதற்கிடையே, சமூக வலைதளங்களில் 'திமுகவின் அடுத்த தலைவர் கனிமொழி' மற்றும் '2031-ஆம் ஆண்டின் முதல்வர் வேட்பாளர் கனிமொழி' என்ற ரீதியிலான வீடியோக்களும் பதிவுகளும் தீவிரமாகப் பரப்பப்பட்டு வருகின்றன.

இந்தச் சமூக வலைதளப் பிரச்சாரங்களின் பின்னணியில் கனிமொழி தரப்பு இருப்பதாகக் கருதி கடும் அதிருப்தி அடைந்த உதயநிதி ஸ்டாலின், இது குறித்து நேரடியாகக் கட்சித் தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலினிடம் புகார் அளித்துள்ளதாகத் தகவல்கள் கசிந்துள்ளன.