'இளைய கலைஞர்' உதயநிதிக்கு புதிய பொறுப்பு - திமுகவில் அடுத்தடுத்து மாற்றம்!
Aug 1, 2026, 16:54 IST
திமுக கட்சியின் கட்டமைப்பை வலுப்படுத்தவும், அடுத்தகட்டப் பணிகளை விரைவுபடுத்தவும் முக்கியப் மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. திமுக தலைமை மற்றும் நிர்வாகிகளால் உதயநிதி ஸ்டாலினை இனி 'இளைய கலைஞர்' என அழைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
கட்சியின் முதன்மைப் பொறுப்புக்குக் கொண்டுவரத் திட்டமிடப்பட்டு வரும் சூழலில், இனி திமுக நிர்வாகிகள் பலரும் தங்களது பணிக் அறிக்கைகளை நேரடியாக உதயநிதிக்குச் சமர்ப்பிக்கும் வகையில் கட்சி விதிமுறைகளிலும் அமைப்பிலும் மாற்றங்கள் செய்யப்படவுள்ளன.
கட்சியில் மூத்த தலைவர்கள் மற்றும் நிர்வாகிகளை ஒருங்கிணைக்கும் வகையில், கனிமொழி எம்.பி.க்கு 'முதன்மை துணைப் பொதுச்செயலாளர்' என்ற புதிய பதவி வழங்கப்பட வாய்ப்பிருப்பதாகக் உட்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
