“உதயநிதி பேசுனது தப்பு; அதான் கைது பண்ணாங்க” - நடிகர் விஷால் கருத்து!
'மகுடம்' திரைப்படத்திற்காக அளித்த நேர்காணலில், முதலமைச்சர் விஜய் குறித்தும், திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதியின் கைது நடவடிக்கை குறித்தும் நடிகர் விஷால் கருத்து தெரிவித்துள்ளார்.
தென்னிந்திய நடிகர் சங்கத்தின் புதிய கட்டடத்தை யாரோ திறந்து வைப்பார்கள் என நினைத்த நிலையில், சங்கத்தின் உறுப்பினரும் தமிழ்நாட்டின் முதலமைச்சருமான விஜய்யே திறந்து வைப்பது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது.

தென்னிந்திய நடிகர் சங்கக் கட்டடத்தின் கல்வெட்டில் "C. Joseph Vijay" என்ற பெயர் அடுத்த 100 ஆண்டுகளுக்கும் மேலாக வரலாறாக நிலைத்திருக்கும். கடந்த 32 வருடங்களாக நான் விசில் அடித்து ரசித்த என் 'விஜய் அண்ணன்' இன்று முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ளார்; அவரை நான் எப்போதும் 'டார்லிங்' என்று தான் அழைப்பேன்" எனக் குறிப்பிட்டார்.

உதயநிதி ஸ்டாலினின் பேச்சு தொடர்பான கேள்விக்குப் பதிலளித்த விஷால், "உதயநிதி பேசியது தவறு; அதன் காரணமாகவே காவல்துறையினர் அவரைச் சட்டப்பூர்வமாகக் கைது செய்துள்ளனர்" எனக் கூறினார்.
