"ஓம் காளி ஜெய் காளி, விஜய் ஒரு **காலி" - கடுமையாக விமர்சித்து உதயநிதி பிரச்சாரம்!

 
உதயநிதிவிஜய்

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் தொகுதி இடைத்தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், இன்று நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய உதயநிதி ஸ்டாலின், தமிழக வெற்றிக் கழகத்தின் மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார்.

முதல்வர் விஜய் தாம் கலந்துகொள்ளும் கூட்டங்களில் "ஓம் சக்தி பராசக்தி" என்று கூறி திமுகவைக் கடுமையாக விமர்சித்து வருவதைச் சுட்டிக்காட்டிய உதயநிதி, அதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் பிரச்சாரக் கூட்டத்தில் புதிய முழக்கத்தை முன்னெடுத்தார்.

தொண்டர்களைப் பார்த்துத் தாம் தொடங்கிய முழக்கத்தைத் தொடருமாறு கூறிய அவர், "ஓம் காளி ஜெய் காளி, தவெக ஒரு ஓடுகாலி" என்று உரத்த குரலில் முழக்கமிட்டார்.

இடைத்தேர்தல் பிரச்சாரக் களத்தில் இரு தரப்புக்கும் இடையேயான வார்த்தைப் போரும் அரசியல் மோதல்களும் உச்சகட்டத்தை எட்டியுள்ளதை இந்தச் சம்பவம் வெளிப்படுத்தியுள்ளது.