"ஒரே மாதத்தில் 200 பாலியல் குற்றங்கள்" - உதயநிதி ஸ்டாலின் குற்றச்சாட்டு!

 
உதயநிதிவிஜய்

தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு நிலைமை மற்றும் பெண்கள், குழந்தைகளின் பாதுகாப்பு குறித்து முன்னாள் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தற்போதைய தமிழக அரசு மீது கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த போது அவர் வெளியிட்ட புள்ளிவிவரங்களின்படி, தமிழகத்தில் கடந்த ஒரே மாதத்தில் மட்டும் 200-க்கும் மேற்பட்ட பாலியல் வன்கொடுமை மற்றும் குற்றச் சம்பவங்கள் அரங்கேறியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

இந்த ஒட்டுமொத்த குற்றங்களில் 100-க்கும் அதிகமானவை சிறுவர் மற்றும் சிறுமிகளுக்கு எதிராக நடத்தப்பட்டவை என்றும், முதலமைச்சர் ஜோசப் விஜய் தலைமையிலான தற்போதைய ஆட்சியில் பெண்களுக்கும் சிறார்களுக்கும் உரிய பாதுகாப்பு இல்லை என்றும் அவர் சாடியுள்ளார். சட்டமன்றப் பணிகள் மற்றும் நிர்வாக ரீதியிலான செயல்பாடுகள் குறித்தும் தனது அதிருப்தியை அவர் வெளிப்படுத்தியுள்ளார்.

உதயநிதி விஜய்

பாலியல் குற்றங்களால் பாதிக்கப்பட்டு உயிரிழக்கும் குழந்தைகளின் உடல்களைப் பிரேதப் பரிசோதனைக்குப் பிறகு உரிய விதிமுறைகளின்படி பெற்றோர்களிடம் ஒப்படைப்பதில் கூட இந்த அரசு முறையான நடைமுறைகளைப் பின்பற்றுவதில்லை என்று அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

மேலும், பதிவாகியுள்ள இத்தகைய குற்றச் சம்பவங்களில் பாதியளவிலான குற்றங்களில் ஆளும்கட்சியைச் சேர்ந்தவர்களுக்கே தொடர்பு இருப்பதாகக் குறிப்பிட்ட அவர், குற்றவாளிகள் மீது அரசு எவ்வித பாரபட்சமும் இன்றி கடுமையான சட்டப்படியான நடவடிக்கைகளை உடனடியாக எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.