உதயநிதி ஸ்டாலின் கைது... திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம்!

 
உதயநிதி கைது

காவிரி விவகாரத்தில் அரசின் தோல்வியை மறைக்கவும், சட்டமன்றத்தில் அரசின் கையாலாகாத்தனத்தை எதிர்ப்பதைத் தடுக்கவுமே திமுக துணைப் பொதுச்செயலாளர் உதயநிதி ஸ்டாலின் அராஜகமாகக் கைது செய்யப்பட்டுள்ளார் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

காவிரிப் பிரச்சினையில் த.வெ.க அரசு தனது உரிமைகளை மீட்க முடியாமல் தோற்றுப் போய் நிற்கும் நிலையில், மக்கள் மத்தியிலும் சட்டமன்றத்திலும் அத்தோல்விகளை மறைக்கவே இத்தகைய பழிவாங்கும் கைது நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.

உதயநிதி விஜய்

ஆர்ப்பாட்டக் களத்தில் உதயநிதி ஸ்டாலின் எந்தவிதத் தவறான கருத்துகளையும் பேசவில்லை. ஜனநாயக ரீதியில் போராடும் உரிமையைத் தட்டிப்பறிக்கும் நோக்கிலேயே இந்த அராஜகக் கைது அரங்கேற்றப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட உதயநிதி ஸ்டாலினை இன்றே விடுவிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது தவெக அரசின் பாசிசப் போக்கிற்கு விழுந்த பலத்த அடியாகும்.

ஜனநாயகத்திற்கு எதிரான இந்த நடவடிக்கையைக் கண்டிப்பதுடன், உதயநிதி ஸ்டாலினுடன் கைது செய்யப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அனைத்து திமுக தொண்டர்களையும், நிர்வாகிகளையும் எந்தவித நிபந்தனையுமின்றி உடனடியாக விடுவிக்க வேண்டும்.