கூட்டணி கட்சியினர் சிலர் முதுகில் குத்தினர் - தாராபுரத்தில் உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்!

 
தாராபுரம் இடைத்தேர்தல்

திமுக கூட்டணியில் இடம்பெற்று வெற்றிபெற்ற சில கட்சிகள் மற்றும் நபர்கள் தங்களுக்குத் தெரிவிக்காமல் விலகிச் சென்றதாகவும், சிலர் தங்களின் முதுகில் குத்திவிட்டதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பகிரங்கமாக் குற்றம்சாட்டியுள்ளார்.

தாராபுரம் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் சுகன்யாவை ஆதரித்துத் தீவிர பிரச்சாரம் மேற்கொண்ட உதயநிதி ஸ்டாலின், அங்கு திரண்டிருந்த பொதுமக்களிடையே உரையாற்றினார்.

மதுராந்தகம் தாராபுரம் இடைத்தேர்தல்

அப்போது பேசிய அவர், திமுக கூட்டணியில் இருந்து வெற்றி பெற்ற சிலர் எந்தவித முன்னறிவிப்பும் இன்றித் திருட்டுத்தனமாக விலகிச் சென்றுவிட்டதாகச் சாடினார். மேலும், சில கூட்டணிக் கட்சியினர் தலைவர் மு.க.ஸ்டாலினிடம் முறையாகத் தெரிவித்துவிட்டுச் சென்ற நிலையில், இன்னும் சிலர் திமுகவின் முதுகில் குத்திவிட்டுச் சென்றுள்ளதாகக் கடுமையாக விமர்சித்தார்.

தேர்தல் களத்தில் நிலவும் அரசியல் சூழல்கள் மற்றும் கூட்டணி கட்சிகளின் தற்போதைய நகர்வுகள் குறித்தும் அவர் தனது பிரச்சாரத்தின் போது விரிவாகப் பேசினார்.