நள்ளிரவு 1.30 மணிக்கு கொட்டும் மழையில் உதயநிதி ஸ்டாலின் நேரில் ஆய்வு - சென்னைக்கு ஆரஞ்சு அலர்ட்!

 
மழை உதயநிதி ஆய்வு

சென்னையில் பெய்துவரும் கனமழையை அடுத்து, எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் நள்ளிரவு 1:30 மணிக்கு நேரடியாகச் சென்று மழைநீர் தேங்கியுள்ள பகுதிகள் மற்றும் சீரமைப்புப் பணிகளை ஆய்வு செய்தார்.

மழை கனமழை ஆட்டோ

சென்னையில் நேற்று பாரிமுனையில் அதிகபட்சமாக 36 செ.மீ மழையும், நகரில் சராசரியாக 20 செ.மீ மழையும் கொட்டித் தீர்த்தது. நேற்றைய மழையானது 'மேகவெடிப்பு' போன்ற தீவிரமானதாக இருந்ததாகக் கூறப்படுகிறது. தொடர் மழையினை அடுத்து நகரின் முக்கிய சுரங்கப்பாதைகளும் பிரதான சாலைகளும் தற்போது இயல்பு நிலைக்குத் திரும்பியுள்ளதாக மாநகராட்சி அறிவித்துள்ளது. இந்நிலையில், இரவு நேரப் பணிகளை நேரில் பார்வையிட எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் களமிறங்கி ஆய்வு மேற்கொண்டார்.