சட்டப்பேரவையில் இருந்து திடீரென பாதியில் புறப்பட்டுச் சென்ற உதயநிதி ஸ்டாலின்!
தமிழ்நாடு சட்டப்பேரவையில் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதங்கள் நடைபெற்றுக் கொண்டிருந்த போது, தவெக மற்றும் திமுக உறுப்பினர்களுக்கு இடையே காரசாரமான விவாதங்கள் எழுந்துள்ள நிலையில், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் அவையில் இருந்து பாதியிலேயே வெளியேறிச் சென்றுள்ளார்.
சட்டப்பேரவையில் இன்று மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, வேளாண்மை, மதுவிலக்கு மற்றும் சமூக நலன் உள்ளிட்ட பல்வேறு முக்கியத் துறைகளின் மீதான மானியக் கோரிக்கைகள் குறித்து தீவிர விவாதம் நடைபெற்றது.கூட்டத்தொடரின் போது தவெக மற்றும் திமுக தரப்பு உறுப்பினர்களுக்கு இடையே கடுமையான வாதப் பிரதிவாதங்களும் கருத்து மோதல்களும் நிலவின.
இந்த பரபரப்பான சூழலுக்கு மத்தியில், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் திடீரென அவையில் இருந்து பாதியிலேயே வெளியேறி அவசர அவசரமாக வீடு நோக்கிப் புறப்பட்டுச் சென்றார். இது தொடர்பான வீடியோ காட்சிகளும் வெளியாகியுள்ளன.
