உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள்... வாழ்த்து சொல்ல கிரீன்வேஸ் சாலையில் குவிந்த திமுகவினர்!

 
உதயநிதி

திமுக இளைஞரணிச் செயலாளரும், சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான உதயநிதி ஸ்டாலின் இன்று தனது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். இதையொட்டி, அவருக்கு நேரில் பிறந்தநாள் வாழ்த்துத் தெரிவிக்கச் சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் திமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் திரண்டு வருகின்றனர்.

பிறந்தநாளை முன்னிட்டுச் சென்னை கிரீன்வேஸ் சாலையில் அமைந்துள்ள உதயநிதி ஸ்டாலினின் இல்லத்தில், காலை முதலே கட்சி நிர்வாகிகள், மாவட்டச் செயலாளர்கள், மக்கள் பிரதிநிதிகள் மற்றும் ஏராளமான தொண்டர்கள் வருகை தந்து பூங்கொத்து, சால்வை அணிவித்து வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர்.

உதயநிதி

திமுகவினர் மற்றும் ஆதரவாளர்கள் சமூக வலைதளங்களிலும் உதயநிதி ஸ்டாலினுக்குப் பிறந்தநாள் வாழ்த்துகளைப் பகிர்ந்து வருகின்றனர். பிறந்தநாளை முன்னிட்டுத் தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் திமுக சார்பில் ரத்ததான முகாம்கள், அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

வாழ்த்து தெரிவிக்கத் திரளும் தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் போக்குவரத்து இடையூறு இன்றிச் செயல்படவும், பாதுகாப்பு விதிமுறைகளைப் பின்பற்றவும் அறிவுறுத்தப்பட்டுள்ளதுடன், சென்னை கிரீன்வேஸ் சாலைப் பகுதியில் காவல்துறையினர் பாதுகாப்பு ஏற்பாடுகளையும் மேற்கொண்டுள்ளனர்.