பிரேமலதா கருத்துக்கு உதயநிதி ஸ்டாலின் நகைச்சுவை பதில்!
தமிழ்நாடு சட்டப்பேரவையில் நடைபெற்ற காவல்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின்போது, தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்தின் பேச்சுக்கு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் நகைச்சுவையாகப் பதிலளித்தது அவையில் சிரிப்பலையை ஏற்படுத்தியது.

சட்டப்பேரவை விவாதத்தின்போது கருத்துத் தெரிவித்துப் பேசிய தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், தவெகவும் திமுகவும் தங்களது கருத்துகளைத் தெரிவிக்க வேண்டும் என்றும், ஒரே விஷயத்தை வைத்து 2 மணி நேரமாக விவாதித்து வருவதாகவும் குறிப்பிட்டார். மேலும், இன்னும் 13 பேர் பேச வேண்டியுள்ள நிலையில், இதுவரை 'தம்பி உதயநிதி' மட்டும்தான் பேசியுள்ளார் என்றும் அவர் கூறினார்.
பிரேமலதா பேசிய உடனே எழுந்த எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், தான் 2 மணி நேரம் பேசவில்லை என்றும், வெறும் 25 நிமிடங்கள் மட்டுமே பேசியுள்ளேன் என்றும் நகைச்சுவையாக விளக்கம் அளித்தார்.
