உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி?! செய்தியாளரிடம் டென்ஷனான ரஜினி... வைரலாகும் வீடியோ!

 
ரஜினி

‘வேட்டையன்’ படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று மாலை சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற உள்ள நிலையில், ஹைதராபாத்தில் நடைபெற்று வரும் ‘கூலி’ படப்பிடிப்பில் இருந்து ‘வேட்டையன்’ இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொள்வதற்கான இன்று சென்னை திரும்பினார் நடிகர் ரஜினிகாந்த்.

இந்நிலையில், இன்று சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய ரஜினியிடம், அமைச்சர் உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி வழங்கப்பட இருப்பதாக செய்திகள் வருகிறதே. இதை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்? என்று செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்பியது, “அரசியல் தொடர்பான கேள்விகளை என்னிடம் கேட்காதீர்கள் என்று எத்தனை தடைவை சொல்லியிருக்கிறேன்” என்று விரலை உயர்த்தியபடி கோபமாக பேசினார். 

தொடர்ந்து வேட்டையன் படம் எப்படி வந்திருக்கிறது என்ற கேள்விக்கு, “படம் நல்லா வந்துருக்கு. என்னை டிஃபரண்டான ஒரு கேரக்டரில் பார்க்கலாம்” என்று கூறிவிட்டு அங்கிருந்து காரில் ஏறி புறப்பட்டுச் சென்றார்.

புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!