ஆதார் சேவைகளை எளிமைப்படுத்த 5 புதிய திட்டங்கள் அறிமுகம் - யுஐடிஏஐ அதிரடி!
Oct 1, 2026, 13:00 IST
ஆதார் சேவைகளை மேலும் எளிமையாக்கும் வகையில் 'முக அடையாளம் மூலம் ஆதார் சரிபார்ப்பு' உள்ளிட்ட 5 புதிய திட்டங்களை இந்திய தனித்துவ அடையாள ஆணையமான யுஐடிஏஐ அறிமுகப்படுத்தியுள்ளது.
இதன் மூலம் இனி ரேஷன் கடைகளில் கைரேகை பதிவுக்குப் பதிலாக முகத்தை ஸ்கேன் செய்தே எளிதாகப் பொருட்கள் பெற்றுக் கொள்ள முடியும். நிறுவனங்களுக்கான சேவைகளை மேம்படுத்தும் வகையில் இந்த புதிய போர்ட்டல் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

அலுவலகங்களில் ஆதார் சேவை மையங்களில் பொதுமக்கள் காத்திருக்கும் நேரத்தைக் குறைப்பதற்காக இந்த முறை கொண்டு வரப்பட்டுள்ளது. சிறு வணிகங்கள் மற்றும் நிறுவனங்கள் ஆதார் சேவைகளைப் பயன்படுத்த ஏதுவாகத் துணை தளங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. பயனர்கள் எளிதாகப் பயன்படுத்தும் வகையில் மேம்படுத்தப்பட்ட புதிய இணையதளம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
