ஆதாரில் பெயர் மாற்றம் - புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்டது UIDAI

 
ரேஷன் கார்டு  ஆதார்

திருமணத்திற்குப் பிறகு பெண்கள் தங்கள் ஆதார் அட்டையில் குடும்பப் பெயரை மாற்றவும், புதிய முகவரியைப் பதிவு செய்யவும் இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) புதிய மற்றும் எளிய வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது.

திருமணத்திற்குப் பிறகு ஆதார் அட்டையில் குடும்பப் பெயரை மாற்ற, அரசு அதிகாரப்பூர்வமாக வழங்கிய திருமணச் சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும்.

ஆதார்

அந்தத் திருமணச் சான்றிதழில் புகைப்படம் இடம் பெற்றிருந்தால், அது மட்டுமே பெயர் மாற்றத்திற்குப் போதுமானது. ஒருவேளை அதில் புகைப்படம் இல்லையென்றால், பழைய பெயர் மற்றும் புகைப்படத்துடன் கூடிய வேறு ஏதாவது ஒரு முறையான அடையாளச் சான்றினை இணைக்க வேண்டும்.

ஆதார்

ஆதார் அட்டையில் முகவரியை மாற்றுவதோடு, கணவரின் பெயரையும் இணைக்கத் தம்பதியர் இருவரின் ஆவணங்களும் மற்றும் திருமணச் சான்றிதழும் கட்டாயமாகச் சமர்ப்பிக்கப்பட வேண்டும் என UIDAI தெரிவித்துள்ளது.