வக்கீல் வேலையை விட்டு நாய்களை நடைப்பயிற்சி கூட்டிச் செல்லும் பெண்! தினமும் ரூ.50,000 வரை வருமானம்!

 
நாய்

 

இங்கிலாந்தை சேர்ந்த 30 வயது பெண் ஒருவர் வழக்கறிஞர் பணியை விட்டுவிட்டு, நாய்களை நடைப்பயிற்சிக்கு அழைத்துச் செல்லும் தொழிலை முழுநேரமாக செய்து வருவது இணையத்தில் கவனம் பெற்றுள்ளது.லிஷ் என்ற அந்த பெண், வழக்கறிஞராக பணியாற்றி வந்த நிலையில், அந்த வேலையை கைவிட்டு நாய் நடைப்பயிற்சி தொழிலில் ஈடுபட முடிவு செய்துள்ளார். தற்போது இதையே தனது முழுநேர தொழிலாக மாற்றியுள்ளார்.

தினமும் சுமார் 20 முதல் 30 நாய்களை நடைப்பயிற்சிக்கு அழைத்துச் செல்வதாக கூறப்படும் லிஷ், ஒரு நாய்க்கு ஒரு மணி நேரத்திற்கு சுமார் ரூ.1,800 வரை கட்டணம் வசூலிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இதன் அடிப்படையில், தினமும் பல நாய்களை நடைப்பயிற்சிக்கு அழைத்துச் செல்வதன் மூலம் ரூ.38,500 முதல் ரூ.51,400 வரையிலான வருமானத்தை ஈட்டுவதாக கூறப்படுகிறது.

நாய்

வழக்கறிஞர் போன்ற தொழில்முறை பணியை விட்டுவிட்டு, நாய்கள் தொடர்பான தொழிலை தேர்வு செய்திருப்பதுடன், அதில் கணிசமான வருமானத்தையும் ஈட்டி வருவது பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.தனக்கு விருப்பமான துறையில் தொழிலை தொடங்கி, அதை முழுநேர பணியாக மாற்றியுள்ள லிஷின் அனுபவம் தற்போது சமூக வலைதளங்களில் பேசுபொருளாகியுள்ளது. குறிப்பாக, செல்லப்பிராணிகளை பராமரிப்பது மற்றும் அவற்றை நடைப்பயிற்சிக்கு அழைத்துச் செல்வது போன்ற சேவைகளுக்கும் சந்தையில் வருமான வாய்ப்பு இருப்பதை இந்த சம்பவம் காட்டுகிறது.