இந்தியாவின் போர் நிறுத்த முன்மொழிவை ஏற்றுக்கொள்ளவும், பரிசீலிக்கவும் உக்ரைன் தயார் - வெளியுறவு அமைச்சர் அறிவிப்பு!
Oct 5, 2026, 06:58 IST
ரஷ்யா-உக்ரைன் இடையிலான போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்காக இந்தியா முன்வைத்த போர் நிறுத்தத் திட்டத்தை ஏற்றுக் கொள்ளவும் பரிசீலிக்கவும் தயாராக இருப்பதாக உக்ரைன் வெளிப்படையாகத் தெரிவித்துள்ளது.

உக்ரைன் வெளியுறவு அமைச்சர் ஆண்ட்ரி சிபிஹா கூறுகையில், இந்தியா, துருக்கி, எகிப்து மற்றும் அமெரிக்கா ஆகிய நான்கு நாடுகளிடமிருந்து போர் நிறுத்தத் திட்டங்கள் வந்துள்ளதாகத் தெரிவித்தார்.

இந்த நாடுகளின் திட்டங்களில் இந்தியாவின் முன்மொழிவு மிகவும் விரிவானது என்று அவர் பாராட்டினார். குறிப்பாக, எரிசக்தி பாதுகாப்பு மற்றும் கருங்கடல் பகுதிகளில் போர் நிறுத்தத்தை ஏற்படுத்துவது தொடர்பான இந்திய யோசனைகளைப் பரிசீலிக்கத் தயாராக இருப்பதாக அவர் உறுதிப்படுத்தினார்.
