ரூ.13,000 கோடிக்கு ஒப்பந்தங்கள் கையெழுத்து - இங்கிலாந்தின் 'கிரேட் நார்த் மிஷன்' வர்த்தகக் குழு இந்தியா வருகை!

 
இங்கிலாந்து

இந்தியாவுக்கும் இங்கிலாந்துக்கும் இடையேயான விரிவான பொருளாதார மற்றும் வர்த்தக ஒப்பந்தம் கடந்த ஜூலை 15-ம் தேதி அமலுக்கு வந்ததைத் தொடர்ந்து, இங்கிலாந்தில் இருந்து 'கிரேட் நார்த் மிஷன்' என்ற பெயரிலான உயர்மட்ட வர்த்தகக் குழுவினர் இந்தியா வந்துள்ளனர். இரு நாடுகளுக்கும் இடையேயான தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தின் பலன்களை முழுமையாகப் பயன்படுத்திக்கொள்ளும் நோக்கில் இந்தப் பயணம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையே நீண்ட நாட்களாக நடைபெற்று வந்த 14 சுற்றுகளிலான தீவிரப் பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு, விரிவான பொருளாதார மற்றும் வர்த்தக ஒப்பந்தம் கடந்த ஜூலை மாதம் அதிகாரப்பூர்வமாக நடைமுறைக்கு வந்தது. இந்த ஒப்பந்தம் இரு நாடுகளுக்கும் இடையேயான வர்த்தக உறவை ஒரு புதிய பரிமாணத்திற்கு எடுத்துச் சென்றுள்ளது.

இந்தியா கப்பல் ஹார்முஸ் எண்ணெய் ஏற்றுமதி

இந்த ஒப்பந்தம் அமல்படுத்தப்பட்டு சுமார் மூன்று மாதங்கள் ஆன நிலையில், தற்போது இங்கிலாந்து வர்த்தகக் குழுவினர் இந்தியாவுடன் புதிய வர்த்தகத் தொடர்புகளை ஏற்படுத்தியுள்ளனர். இதன் ஒரு பகுதியாக, சுமார் 1 பில்லியன் பவுண்டுகள் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.13 ஆயிரம் கோடி) மதிப்புள்ள புதிய முதலீட்டு மற்றும் வணிக ஒப்பந்தங்கள் வெற்றிகரமாகக் கையெழுத்தாகியுள்ளதாக இங்கிலாந்து அரசு அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளது.

இந்தியா வந்துள்ள இங்கிலாந்து வர்த்தகக் குழுவில், அந்நாட்டின் வர்த்தகச் செயலாளர் ஜொனாதன் ரெனால்ட்ஸ், ஸ்காட்லாந்து செயலாளர் டக்ளஸ் அலெக்சாண்டர், சுற்றுச்சூழல், உணவு மற்றும் கிராமப்புற விவகாரங்கள் செயலாளர் ஏஞ்சலா ஈகிள் மற்றும் வடக்கு இங்கிலாந்தின் 7 மேயர்கள் இடம்பெற்றுள்ளனர். இவர்களுடன் பல்வேறு முக்கியத் துறைகளைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட வணிக நிறுவனங்களின் தலைவர்களும் இந்தியா வந்துள்ளனர்.

உத்தராகண்டிலிருந்து துபாய்க்கு முதல் முறையாக காய்கறிகள் ஏற்றுமதி

இரு நாடுகளுக்கும் இடையேயான பொருளாதார உறவை மேலும் வலுப்படுத்தும் விதமாக வந்துள்ள இந்த வர்த்தகக் குழுவின் மூலம் பல்வேறு துறைகளில் புதிய வேலைவாய்ப்புகளும் முதலீடுகளும் பெருகும் என எதிர்பார்க்கப்படுகிறது.