சாலைத் தடுப்பில் மோதி பைக் விபத்து; 2 பேர் படுகாயம்!

 
பைக்

 

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே அதிகாலை நேரத்தில் நிலவிய கடும் பனிமூட்டம் காரணமாக இருசக்கர வாகனம் சாலைத் தடுப்பில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் பைக்கில் சென்ற இருவர் பலத்த காயமடைந்தனர்.

உளுந்தூர்பேட்டை அருகே பனிமூட்டத்தால் பைக் தடுப்பில் மோதி 2 பேர் படுகாயம் / Two people seriously injured after bike crashes into roadblock due to fog near Ulundurpet.

உளுந்தூர்பேட்டை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இன்று (நவம்பர் 11) அதிகாலை கடும் பனிமூட்டம் நிலவியது. இதனால் சாலையில் எதிரே வரும் வாகனங்கள் மற்றும் தடுப்புக் கட்டைகள் சரிவரத் தெரியாத நிலை ஏற்பட்டது. அப்போது இருசக்கர வாகனத்தில் சென்ற ராஜா (29), பூமிகா (24) ஆகியோர் சாலைத் தடுப்புக் கட்டையை கவனிக்காமல் அதன் மீது மோதியதாகக் கூறப்படுகிறது.

மருத்துவமனை ஆம்புலன்ஸ் போலீஸ் கொலை கத்திக்குத்து

இந்த விபத்தில் இருவரும் தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்தனர். இதைக் கண்ட அக்கம்பக்கத்தினர் உடனடியாக அவர்களை மீட்டு, ஆம்புலன்ஸ் மூலம் உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு இருவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

அதிகாலை பனிமூட்டம் நிலவும் நேரங்களில் வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரியவிட்டு, வேகத்தைக் குறைத்து எச்சரிக்கையுடன் செல்ல வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.